2020 மக்கள் தொகை கணக்கெடுப்பு: பிரதமர் தொடக்கி வைக்கிறார்

புத்ராஜெயா, ஜூன் 6-

மலேசியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாள் தொடக்க விழா ஜூலை 7ஆம் தேதி புத்ராஜெயாவிலுள்ள சர்வதேச மாநாடு மையத்தில் (PICC)) நடைபெறவிருக்கின்றது.

இவ்விழாவிற்கு மலேசிய பிரதமர் டான்ஸ்ரீ முகீடின் யாசின் தலைமை ஏற்கிறார். “சிறந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நாட்டின் எதிர்காலம்” என்ற கருப்பொருளோடு இந்தத் தொடக்க விழா நடைபெறுகின்றது.

2020 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடையாள தொடக்கமாக மலேசியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பாடல் அதிகாரபூர்வமாக வெளியிடப்படுகின்றது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு நாள் ஜூலை 7, 20 20 உடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் 2020 உடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஊடக அமர்வு, அரசு சார்ந்த நிறுவனங்கள் ஜிஎல்சி மற்றும் தனியார் துறையின் கண்காட்சிகள், மக்கள் தொகை கணக்கெடுப்பு சின்னங்களின் தோற்றம், கருத்தரங்குகள், மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்கங்கள் பற்றிய புள்ளி விவரங்கள் என பல்வேறான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

2020 மக்கள் தொகை கணக்கெடுப்பு மலேசியா தொடங்கியதில் இருந்து 6ஆவது முறையாக நடக்கின்றது. ஒவ்வொரு 10 ஆணடுகளுக்கு ஒரு முறை இந்தக் கணக்கெடுப்பு நடைபெறும். மக்கள் தொகை கணக்கெடுப்பை செயல்படுத்துவதன் நோக்கம் விரிவான மற்றும் மக்கள்தொகை வீட்டுப் பங்குகள் சுய விவரங்களை மிகச் சிறந்த முறையில் பட்டியலிடுவதே ஆகும்.

தேசிய வளர்ச்சி திட்டங்களை உருவாக்குவதில் மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவு ஒரு முக்கிய மற்றும் முதன்மை ஆதாரமாக இருக்கும்.

உலகத்தையும் நாட்டையும் உலுக்கிய covid-19 நோய்த்தொற்றைத் தொடர்ந்து சுமார் 32.7 மில்லியன் மலேசியர்கள், 9 மில்லியன் வீடுகள் கொண்ட 2020 மக்கள் தொகை கணக்கெடுப்பை இரண்டு கட்டங்களாக மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. முதல் கட்டம் ஜூலை 7 தொடங்குகிறது.

முதல்கட்ட கணக்கெடுப்பு ஜூலை 7-இல் தொடங்கிச் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நடைபெறும். இஃது இணையம் வழி மேற்கொள்ளப்படும். இரண்டாம்கட்ட கணக்கெடுப்பு அக்டோபர் 7 முதல் 24 வரை நேருக்கு நேர் கணக்கு எடுக்கப்படுமென கூறப்பட்டுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2020 பற்றிய கூடுதல் தகவல்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு இணையதளப் பதிவேட்டின் மூலம் பெறலாம். www.mycensus.gov.my அல்லது @MyCensus2020