நாடாளுமன்றம் கலைக்கப்படாது என பிரதமர் அறிவிக்க வேண்டும்?! நஸ்ரி அசிஸ்

கோலாலம்பூர் ஜூலை 9-

2023ஆம் ஆண்டு வரை நாடாளுமன்றம் கலைக்கப்படாது என்று பிரதமர் தான் ஸ்ரீ முகீடின் யாசின் தைரியமாக அறிவிக்க வேண்டும் என்று பாடாங் ரெங்காஸ் நாடாளமன்ற உறுப்பினர் நஸ்ரி அசிஸ் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய கூட்டணியை வலுப்படுத்தவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பகத்தன்மையைப் பெறுவதற்கும் பிரதமருக்கு அதிகமான கால அவகாசம் உண்டு என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

“இவ்வாறு முகீடின் அறிவித்தால் மக்கள் அவரைத் தைரியமானவர்; நம்பிக்கையானவர் என்ற பார்வையில் நோக்குவார்கள்.” என்றார் நஸ்ரி அசிஸ்.

“இதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வர வாய்ப்புள்ளது, 3 ஆண்டுகளுக்குள் அவர் தேசியக் கூட்டணியை ஒருங்கிணைக்க முடியும்” என்று ஆஸ்ட்ரோ அவாணியிடம் கூறியுள்ளார்.

எந்நேரத்திலும் பொதுத்தேர்தல் நடத்தப்படும். தேசியக் கூட்டணி வலுவாக இல்லை என அரசியல் ஆய்வாளர்களும் ஊடகங்களும் கூறி வருவது குறித்துக் கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.