சென்னை, ஜூலை 9-

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும கோவிட் 19 கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்கின்றது.

ஆயினும் இந்த நோயிலிருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவு உயர்ந்து வருகின்றது. மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் சென்னையில் தான் கோவிட் 19 ஆல் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

சென்னையில் 72 ஆயிரத்து 500 பேர் கோவிட் 19ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 49 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நோய் தொற்றுக் காரணமாக நேற்றுவரை (08-07-2020) 1,146 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று (09-07-2020) காலை நிலவரப்படி 19 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

அரசு மருத்துவனமையில் 17 பேரும், தனியார் மருத்துவமனையில் 2 பேரும் உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது.