சமூக வலைத்தளத்தில் வைரலாகும் விஜய் சேதுபதி பட முதல் பார்வை!

துக்ளக் தர்பார் முதல் பார்வை போஸ்டரை பல பிரபலங்கள் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்...

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் துக்ளக் தர்பார்.

இப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைக்கிறார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் முதல் பார்வை (பர்ஸ்ட் லுக்) போஸ்டரை ஜூலை 8 ஆம் தேதி மாலை வெளியிட இருப்பதாக அறிவித்தார்கள்.

அதன்படி வெளியான போஸ்டர் சிறிது நேரத்திலேயே ரசிகர்களைக் கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகியது