ஜசெகவின் 46 ஆண்டுகால உறுப்பினர் விலகினார்!

ஜசெக கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் தாம் விலகுவதாக தலைமையகத்திற்கு அனுப்பிய அதிகாரப்பூர்வ கடிதத்தை மேரி செய்தியாளர்களின் காட்டுகிறார்...

சிரம்பான், ஜூலை 10-

ஜனநாயக செயல் கட்சியின் (ஜசெக) ரஹாங் சட்டமன்ற உறுப்பினர் மேரி ஜோசபின் பிரிட்டம் சிங் கட்சியில் இருந்து விலகுவதற்கான தனது முடிவை அறிவித்துள்ளார், ஆனால் அவர் நம்பிக்கைக் கூட்டணிக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

71 வயதான மேரி, 1974ஆம் ஆண்டு முதல் ஜசெகவின் உறுப்பினராக இருக்கின்றார். ரஹாங் சட்டமன்ற உறுப்பினராக இரண்டு தவணையாக இருந்து வரும் நிலையில். கட்சியிலிருந்து வெளியேறுவது திடீரென எடுக்கப்பட்ட முடிவல்ல என்றார்.

சமாளிக்க முடியாத சவால்களை எதிர்கொள்வதால் கட்சியிலிருந்து விலகுவதற்கான முடிவை எடுத்ததாகச் செய்தியாளர்களிடம் கூறினார்.

“ஒருமைப்பாடு, பெருமை மற்றும் கட்சி பிம்பத்தை நிலைநிறுத்துவதில், கடந்த 46 ஆண்டுகளில் ஒரு ஜசெக உறுப்பினராக எனக்குள் ஊற்றப்பட்ட கொள்கைகள் மற்றும் ஒழுக்கங்களின் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதில், நான் சவால்களை எதிர்கொள்கிறேன் என்றார் அவர்.

நெகிரி செம்பிலான் ஜசெக உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களுடன் பணியாற்றுவதும் ஆதரிப்பதும் மிகப் பெரிய ஏமாற்றமாகிவிட்டது, மிகுந்த மனதுடன்,ஜசெகவுடனான பயணம், உறுப்பினர் மற்றும் அனைத்து கட்சி பதவிகளிலிருந்தும் நான் விலகுவதைத் தவிர வேறு வழியில்லை, ”என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.