மலேசிய ரசிகர்களை கவர்ந்த கள்வனை கண்டுப்பிடி!

திங்கள், 13 ஜூலை
கள்வனை கண்டுப்பிடி (புதிய அத்தியாயங்கள் – 10-14)
ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), திங்கள்-வெள்ளி, 9pm | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: லிங்கேஸ்வரன் மணியம் & பாஷினி சிவகுமார்
விஷான் ஆன்மா மரத்திற்குள் சிக்கிக் கொள்கிறார். அப்போது, இன்னொரு ஆத்மா தன் பரிமாணத்தைக் கட்டுப்படுத்துவதை உணர்கிறார். குமரன் தொடங்கி விஷானுக்கு மிக நெருக்கமானவர்களை ஆத்மாக்கள் தாக்கத் தொடங்குகின்றன. விஷான் மிகப்பெரிய தவறு புரிகிறார்.

வியாழன், 16 ஜூலை
யஹான் சபி கியானி ஹேன் (முதல் ஒளிப்பரப்பு / ப்ரிமியர்)
BollyOne HD (அலைவரிசை 251), 9pm
நடிகர்கள்: அபூர்வா அரோரா, மீனா நதனி, அதுல் ஸ்ரீவஸ்தவா & நீரஜ் சூத்
கான்பூரில் திரைப்படமாக்கப்பட்ட ஒரு நையாண்டி நகைச்சுவைத் திரைப்படம். செயலற்ற “கான்புரியா” குடும்பத்தைப் பற்றிய சுவாரஸ்சியமானக் கதை. அக்குடும்பத்திடம் மூதாதையர் புதையலை மறைத்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் புதையலைக் கண்டுபிடிக்கும் முயற்சியில், அக்குடும்பம் வாழ்க்கையின் உண்மையான பாடத்தைக் கற்றுக் கொள்கின்றது.

வெள்ளி, 17 ஜூலை
பொய்யாட்டம் (முதல் ஒளிப்பரப்பு / ப்ரிமியர்)
ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), 9pm | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: வி. ரவிச்சந்திரன், சுதீப் & அமலா பால்
ஒரு அச்சமற்ற கமாண்டோ தனது சகோதரனின் தற்கொலைச் செய்திக்குப் பின் வீட்டிற்கு வருகிறார். தனது சகோதரனின் மர்மமான மறைவுக்குப் பின்னால் இருக்கும் காரணத்தை ஆழமாக விசாரிக்கத் தொடங்குகிறார்.

சனி, 18 ஜூலை
All Love No Hate – சித் ஸ்ரீராம் கச்சேரி (முதல் ஒளிப்பரப்பு / ப்ரிமியர்)
ZEE தமிழ் எச்டி (அலைவரிசை 235), 7.30pm | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
விருது பெற்ற பின்னணி பாடகரான சித் ஸ்ரீராம் இடம்பெறும் இந்த இசை நிகழ்ச்சியை ரசிகர்கள் கண்டு மகிழலாம். அவர் தனது புகழ்ப் பெற்றச் சிறந்த பாடல்களான ‘அன்பே பேரன்பே’, ‘சாமஜவரகமனா’, ‘கண்ணான கண்ணே’, ‘மருவார்த்தை’, ‘குரும்பா’ மற்றும் பல பாடல்களைப் பாடி அசத்தவுள்ளார். லியோன் ஜேம்ஸ் (விசைப்பலகை), கெபா (கிட்டார் கலைஞர்), சஞ்சீவ் (கிட்டார் கலைஞர்), பாஸ்கர் (வயலின் கலைஞர்), ராம்குமார் (டிரம்மர்), தப்பஸ் (டிரம்மர்), மைலாய் கார்த்திக் (நாதஸ்வரம்) மற்றும் கார்த்திக் (கதம்) உள்ளிட்ட பல சிறந்த கலைஞர்களை இந்த இசை நிகழ்ச்சி ஒன்று சேர்த்தது. “All Love No Hate – சித் ஸ்ரீராம் கச்சேரி” YMCA நந்தனம் மைதானம், சென்னையில் 8 பிப்ரவரி 2020 அன்று நேரலையாக நிகழ்தது.

அழியாத கோலங்கள் 2 (அலைவரிசை முதல் ஒளிப்பரப்பு / ப்ரிமியர்)
ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 9.30pm | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: பிரகாஷ் ராஜ், ரேவதி & அர்ச்சனா
ஒரு பிரபலமான எழுத்தாளர் மற்றும் அவரது முன்னாள் காதலரின் வாழ்க்கை பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் போது பாதிக்கப்படுகிறது.

நக்கீரன் – எங்கே நிம்மதி (புதிய அத்தியாயம் – 13)
ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 9pm | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
வயதானவர்கள், ஆதரவற்றோர்கள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகளை மையமாகக் கொண்டிருக்கும்.

ஞாயிறு, 19 ஜூலை
குற்றம் குற்றமே – வீடு புகுந்து திருடுதல் (புதிய அத்தியாயம் – 10)
ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 8pm | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நன்கு உடையணிந்த குடும்பம் ஒரு பெட்ரோல் நிலையத்தில் ஓய்வெடுக்க நிற்கின்றனர். அப்போது, இரண்டு மோட்டார் சைக்கில்களில் மூன்று ஆண்கள் அவர்களைச் சுற்றித் தீங்கிழைக்கும் வகையில் செயல்படுகின்றனர். அவர்களில் ஒருவன் நிறைய நகைகள் அணிந்திருக்கும் பெண்களைப் புகைப்படம் எடுக்கிறான். அக்குடும்பத்தினர் பெட்ரோல் நிலையத்தை விட்டு வெளியேறுகின்றனர். ஆனால், அம்மூன்று ஆண்களும் தங்கள் இல்லத்திற்குப் பின்தொடர்வதை அக்குடும்பத்தினர் உணரவில்லை. குடும்பத்தினர் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், மூன்று ​​முகமூடி அணிந்த ஆண்கள் வீட்டிற்குள் பாராங்கத்தியுடன் நுழைந்தனர். காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர். விசாரணையின் ஒரு பகுதியாக அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் விசாரிக்கப்பட்டனர்.

ராகாவின் சிறப்பு நிகழச்சிகள்
திங்கள், 13 ஜூலை
எது திறனாகக் கருதப்படுகிறது?
ராகா, 6 – 10am | SYOK செயலியில் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
‘உங்களை பொருத்தவரையில் திறன் என்றால் என்ன?’ எனும் தலைப்பையொட்டிய சுரேஷ் மற்றும் அஹிலாவின் திறன்கள் குறித்த சுவாரஸ்யமான கலந்துரையாடலை ரசிகர்கள் கேட்டு மகிழலாம். ரசிகர்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும் ஆன்-ஏரில் பகிர்ந்து கொள்ளலாம். அதுமட்டும்மின்றி, சுரேஷ் மற்றும் அஹிலா இருவரும் ஜூலை 13 முதல் ஜூலை 17 வரை காலை 9 மணி முதல் 10 மணி வரை திறன் சார்ந்த சவால்களை மேற்கொள்ள உள்ளனர். வெற்றியாளருக்கு தினமும் புள்ளிகள் வழங்கப்படும். மேலும், வார இறுதியில், அதிக புள்ளிகள் பெற்றவர் வெற்றியாளராக முடிசூட்டப்படுவர், தோல்வியுற்றவர் வெற்றியாளரின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இன்றைய திறன் தையல். ஆக, சுரேஷ் மற்றும் அஹிலா இருவரும் வழங்கப்பட்ட தையல் கருவியைப் பயன்படுத்தி தைக்க வேண்டும். இருவரும் சவால்களை வெற்றிகரமாக முடிக்கும் அற்புதமான காணொளியை ரசிகர்கள் ராகாவின் இன்ஸ்ட்டாகிராம் மற்றும் முகநூல் வழியாக கண்டு மகிழலாம்.

செவ்வாய், 14 ஜூலை
நேர்காணல்: தொழில்திறன் கல்வியின் வழி எவ்வாறு மலேசியர்கள் பயனடைய முடியும்?
ராகா, 6 – 10am | SYOK செயலியில் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
விருந்தினர்: செல்வமலர், மை ஸ்கில் அறவாரியம்
புதிய தொழில்திறன்களைக் கற்றுக்கொள்வதினால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி பகிர்ந்து கொள்ளும் மை ஸ்கில் அறவாரியத்தைச் சேர்ந்த செல்வமலருடன் ஒரு சுவாரஸ்யமான பகிர்வங்கம். மை ஸ்கில் அறவாரியத்தைச் சேர்ந்த 5 மாணவர்கள் புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது மற்றும் அவர்கள் கடந்துவந்த உருமாற்றச் செயல்முறை குறித்த தங்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் காணொளியை ரசிகர்கள் ராகாவின் இன்ஸ்ட்டாகிராம் மற்றும் முகநூல் வழியாக கண்டு மகிழலாம். மேலும், சுரேஷ் மற்றும் அஹிலா, ஓவியம் வரையும் திறனை இன்றைய சவாலாக ஏற்றுக் கொள்வதோடு, வரைந்த ஓவியங்களுக்கு ஒரு கதையையும் கூறுவர்.

புதன், 15 ஜூலை
மலேசிய நட்சத்திரமான ஹேமாஜியுடன் ஒரு நாள்
ராகா, 7 – 10am | SYOK செயலியில் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
அறிவிக்கும் திறனை சோதிக்கும் வண்ணம், விருந்தினர் அறிவிப்பாளரான ஹேமாஜி, சுரேஷ் மற்றும் அஹிலாவுடன் கைகோர்த்து நிகழ்ச்சியில் அறிவிப்புகளை மேற்க்கொள்வதை ரசிகர்கள் கேட்டு மகிழலாம். ஒரு வண்ணப் பென்சில்கள் பெட்டியைப் பகிர்ந்து படங்களுக்கு வர்ணம் தீட்டும் சவாலை அவர்கள் மூவரும் ஏற்ப்பர். இம்முவரும் சவால்களை மேற்க்கொள்ளும் காணொளியை ரசிகர்கள் ராகாவின் இன்ஸ்ட்டாகிராம் நேரலை வழியாக கண்டு மகிழலாம்.

வியாழன், 16 ஜூலை
நேர்காணல்: Institut Kemahiran Belia Negara (IKBN)-இல் சேர்வதால் ஏற்படும் நன்மைகள்
ராகா, 6 – 10am | SYOK செயலியில் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
விருந்தினர்: அதிகாரி, IKBN
Institut Kemahiran Belia Negara (IKBN)-இல் இணைவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பங்கேற்பாளர்களுக்காக காத்திருக்கும் வாய்ப்புகளைப் பற்றிய தகவல்களை (IKBN)-இல் இருந்து வருகை புரிந்த விருந்தினர் பகிர்ந்து கொள்வார். மேலும், சுரேஷ் மற்றும் அஹிலா, கழுத்து பட்டையைக் (neckties) கட்டும் திறனை இன்றைய சவாலாக ஏற்றுக் கொள்வர். இருவரும் சவால்களை வெற்றிகரமாக முடிக்கும் அற்புதமான காணொளியை ரசிகர்கள் ராகாவின் இன்ஸ்ட்டாகிராம் நேரலை வழியாக கண்டு மகிழலாம்.

வெள்ளி, 17 ஜூலை
நேர்காணல்: ஆர். நரேஷ் பிள்ளை மதிப்புமிக்க விருதை எவ்வாறு வென்றார்?
ராகா, 6- 10am | SYOK செயலியில் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
விருந்தினர்: ஆர். நரேஷ் பிள்ளை, அனைத்துலக மனிதாபிமான விருது (Global Humanitarian Award) வெற்றியாளர்
சிறந்த சமூக சிந்தனை (Best Societal Spirits) பிரிவிற்கான World Humanitarian Drive (WHD)-ஆல் மதிப்புமிக்க அனைத்துலக மனிதாபிமான விருது (Global Humanitarian Award) வழங்கி கௌரவிக்கப்பட்ட ஆர். நரேஷ் பிள்ளையுடன் ஒரு சுவாரஸ்சியமான பகிர்வங்கத்தை ரசிகர்கள் கேட்டு மகிழலாம். அவர் மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்தும் பகிர்ந்து கொள்வார். மேலும், சுரேஷ் மற்றும் அஹிலா, ஒரு பழங்கால டின் திறக்கும் கருவியைப் பயன்படுத்தி 3 டின்கன் திறக்கும் சவாலை ஏற்ப்பர். ராகாவின் இன்ஸ்ட்டாகிராம் நேரலையின் போது தோல்வியுற்றவர் ஒவ்வொரு டின்களிலிருந்து ஒரு தேக்கரண்டி உணவை சாப்பிடுவர்..