உள்ளூர் கலைஞர்களின் அதிரடிப் படைப்புகளை தாங்கி மலர்கின்றது Isai.my!

மின்னல்fm-ல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் மணி 1.30க்கு Isai.my நிகழ்ச்சி ஒலியேறி வருகின்றது. இளைய கலைஞர்கள் முதல் மூத்த கலைஞர்கள் வரை அனைவருக்கும் இந்நிகழ்ச்சி ஒரு களம் அமைத்துக் கொடுக்கிறது.

தரமான மலேசியப் பாடல்களுக்கு மென்மேலும் அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி அமைகிறது. பாடல்கள் மட்டுமல்லாது, நகைச்சுவை அங்கமும் இடம் பெறுகின்றது. அந்த வகையில் இந்த வார Isai.my நிகழ்ச்சியில் பின்னனி பாடர்கள் குகாஶ்ரீ மற்றும் தயாபரி நமக்காக சில பாடல்களை பாடவுள்ளனர். நாற்பது ஆண்டுக்களுக்கும் மேலாக இசை துறையில் நிலைத்துக்கொண்டிருக்கும் மூத்த கலைஞர் எம் எஸ் வி கேசவன் மயங்கும் மனது என்ற பாடலை இவ்வார நிகழ்ச்சியில் பாடவுள்ளார்.

நகைச்சுவை கலைஞர்களுக்கும் இந்நிகழ்ச்சி நல்லதொரு களமாக அமைகிறது. பச்சை புள்ளிங்கோ குழுவினர் நம்மை சிரிக்க வைக்கபோகிறார்கள். இந்நிகழ்ச்சியை கேட்க மறவாதீர்கள்!

இந்த Isai.my நிகழ்ச்சியில் பங்கெடுக்க மூத்த கலைஞர்களும் புதிய கலைஞர்களும் இந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் சத்யாவை 03-22824768/5733 அல்லது rjsathiyaminnal_minnalfm Instagram வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.