கோவிட் 19: இன்றும் 6 சம்பவங்கள் பதிவு!

புத்ராஜெயா, ஜூலை 13-

மலேசியாவில் இன்று கோவிட் 19 நோய் தொற்று காரணமாக 7 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் ஒருவர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த காரணமாக இதுவரையில் இந்த நோய் தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,725 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 83 பேர் மட்டுமே இன்னமும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நோய் தொற்றின் காரணமாக மரணச் சம்பவங்கள் நிகழவில்லை. அதனால் கோவிட் 19 காரணமாக மலேசியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 122ஆக நீடிக்கின்றது.

இன்று ஒருவர் குணமடைந்துள்ளார். மொத்த எண்ணிக்கை 8,520 ஆக அதிகரித்துள்ளது. இது 97.65 விடுக்காடு ஆகும்.