மதுவின் அளவு எல்லை கடந்தால் கட்டாய சிறை! போக்குவரத்து அமைச்சர்

கோலாலம்பூர் ஜூலை 15-

நாடாளுமன்றம்: மது, போதைப்பொருள், பொறுப்பற்ற வாகனம் ஓட்டுதல் ஆகிய குற்றங்களுக்கான போக்குவரத்து சட்டம் 1987, பிரிவு 41 முதல் பிரிவு 45ஐ திருத்துவதற்கு அரசாங்கம் அடிப்படையில் ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த சட்டத்திருத்தம் சாலைகளில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளும் நபர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என போக்குவரத்து அமைச்சர் வீ கா சியாங் விளக்கமளித்தார்.

தண்டனையின் கூறுகளான அபராதம், சிறை தண்டனை மற்றும் வாகன இடைநீக்க காலம் உட்பட மூன்றும் திருத்தப்படும் என்று அவர் நாடாளுமன்றத்தில் கேள்வி-பதில் அமர்வில் பதிலளித்தார்.

இதுதவிர உலக சுகாதார அமைப்பு ( WHO) பரிந்துரைத்த மது உள்ளடக்க தரங்களுக்கு அரசாங்கம் இந்த மாற்றத்தை செய்துள்ளது. இது அனுமதிக்கப்பட்ட மது உள்ளடக்கத்தை 80 மில்லிகிராம் முதல் 100 மில்லிலிட்டர் ரத்தத்தில் 50 மில்லிகிராம் மது வரை குறைக்க வேண்டும் என்று வீ கூறினார்.

குடிபோதையில் வாகனம் செலுத்தி மரணத்தை விளைவிப்பவர்கள் எனக்கு மரண தண்டனை விதிக்கப்படுமா என்பதற்கு? உண்மையில் நாங்கள் கோபமாக இருக்கிறோம். ஆனால் இந்த குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் தகுந்த சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பிக்க கூடாது என்பதற்காக நாங்கள் பொறுப்பற்ற நடவடிக்கையை எடுக்க முடியாது என்றார் அவர்.

பிரிவு 44 இன் கீழ் அதிகபட்ச சிறை முதல் குற்றத்திற்கு 10 ஆண்டுகளிலிருந்து 15 ஆண்டுகளும் அடுத்தடுத்த குற்றங்களுக்கு 20 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என வீ கூறினார்.

முன்மொழியப்பட்ட அபராத விகிதம் தற்போதைய 20000 வெளியிலிருந்து ஒரு லட்சமாக உயர்த்தப்படும். பின்வரும் குற்றங்களுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்படும். அதோடு 10 ஆண்டுகளுக்கு வாகன ஓட்டும் உரிமம் தடை செய்யப்படுவது 20 ஆண்டுகள் வரை உயர்த்தப்படும் என அவர் கூறினார்.

அதோடு பிரிவு 45 இன் கீழ் மது அளவை மீறி வாகனம் ஓட்டுதல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறைதண்டனை கட்டாய தண்டனையாக முன்மொழியப்பட்டுள்ளது என அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.