சிலிம் சட்டமன்ற உறுப்பினர் காலமானார்!

தேசிய முன்னணியின் பேரா மாநில சிலிம் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ குசைரி அப்துல் தாலிப் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூச்சுத் திணறல் காரணமாக அவர் உயிர் பிரிந்தது. முன்னதாக அவர் பெந்தோங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் இறந்து விட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

முன்னதாக அவர் 2017 ஆம் ஆண்டில் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் (ஃபினாஸ்) தலைவராக இருந்துள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில், பெர்சத்து மற்றும் பாஸ் வேட்பாளர்களைத் தோற்கடித்து 2,183 பெரும்பான்மையுடன் தேசிய முன்னணியின் சின்னத்தில் அவர் வெற்றி பெற்றார். 

கூடிய விரையில் சிலிம் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் அறிவிக்கப்படலாம்