கோவிட் 19: இன்று 3 சம்பவங்கள் பதிவு!

புத்ராஜெயா, ஜூலை 16-

மலேசியாவில் இன்று கோவிட் 19 நோய் தொற்று காரணமாக 3 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் 12 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த காரணமாக இதுவரையில் இந்த நோய் தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,737 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 77 பேர் மட்டுமே இன்னமும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இன்றைய கோவி 19 கிருமித் தொற்று குறித்து மலேசிய சுகாதார அமைச்சு வெளியிட்ட பட்டியல்…

இந்த நோய் தொற்றின் காரணமாக மரணச் சம்பவங்கள் நிகழவில்லை. அதனால் கோவிட் 19 காரணமாக மலேசியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 122ஆக நீடிக்கின்றது.

இன்று 12 பேர் குணமடைந்துள்ளார்கள். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,538 ஆக அதிகரித்துள்ளது. இது 97.72 விடுக்காடு ஆகும்.