ஈன்றெடுத்த குழந்தையைக் கொலை செய்த கொடூரம்! கல்லூரி மாணவி மீது குற்றச்சாட்டு

ஜார்ஜ்டவுன், ஜூலை 16-

18 வயது கல்லூரி மாணவி மீது தனது அடுக்குமாடி குடியிருப்பின் 13வது மாடியிலிருந்து புதிதாகப் பிறந்த குழந்தையைத் தூக்கி எறிந்து கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜூலை 10 தேதி காலை 8.25 மணியளவில் ஆயிர் இத்தாம், பண்டார் பாருவில் அவர் குற்றத்தைப் புரிந்ததாகக் கூறப்பட்டது.

கொலைக்கான தண்டனை சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டு பினாங்கு மருத்துவமனை மகப்பேறு பகுதியில் மாஜிஸ்திரேட் ஃபட்ரீனா கைரி முன் வாசிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று தடுத்து வைக்கப்பட்டார்.

துணை அரசு தரப்பு வழக்கறிஞர் யாஜிட் முஸ்தகீம் ஆஜராகியுள்ளார்.. வழக்கறிஞர் ஆர் எஸ் என் ராயர் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிரதிநிதித்துள்ளார்.

நாட்டில் சமீபத்திய வழக்கு சட்டத்தை மேற்கோளிட்டு ஜாமீன் பெற முடியாத குற்றமாக இருந்தாலும் ராயர் ஜாமீன் கோரியுள்ளார். வழக்கு விசாரணை ஆகஸ்ட் 14 முன்னெடுக்கப்படுகின்றது.

முன்னதாக ஓர் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து குழந்தையை வீசி எறிந்ததாகத் தொடரப்படும் விசாரணைக்கு உதவும் பொருட்டு அந்த மாணவியின் காதலன் ஆறு நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டார்.

18 வயதான அந்த இளைஞர் நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்துமிட பகுதிக்கு அருகே உள்ள சாலையில் புதியதாகப் பிறந்த பெண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து அங்குள்ள குடியிருப்பாளர்கள் ஒருவர் போலீஸ் புகார் செய்திருந்தார்.