இனவாத சிக்கல்கள் தலைத்தூக்கக்கூடாது! தினாளன் ராஜகோபால்

தேசிய முன்னணியின் இளைஞர் கூட்டத்தில் கலந்து கொண்ட தினாளனுக்கு வெஸ்ட் அணியப்பட்டபோது...

கோலாலம்பூர், ஜூலை 16-

தேசிய முன்னணி இளைஞர் பகுதியின் உச்சமன்றக் கூட்டத்திற்குத் தேசிய மஇகா இளைஞர் பகுதிப் பொறுப்பாளர்களுடன் தாம் கலந்து கொண்டதாக அதன் தேசியத் தலைவர் தினாளன் இராஜகோபாலு தெரிவித்தார்.

நாட்டின் அரசியல் நிலைத்தன்மைக்கும் போக்கிற்கும் ஏற்ப சரியான நேரத்தில் இக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இனவாத பிரச்சனை உட்பட அரசியல் சார்ந்த பல பிரச்சினைகளைப் பற்றி இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இது போன்ற பிரச்சினைகள் இனி வரும் காலங்களில் மீண்டும் தலைதூக்காமல் இருக்க, இப்பிரச்சனையை தேசிய முன்னணி இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ அஸ்ராஃப் வஜ்டி டுசுக்கியிடம் மஇகா இளைஞர் பகுதி முன்வைத்ததாக அவர் மேலும் கூறினார்.

தேசிய முன்னணி கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள இதர கட்சிகளின் இளைஞர் பிரிவுத் தலைவர்கள் பொறுப்பாளர்கள்..

இது போன்ற இனவாத பிரச்சினைகள் இனிவரும் காலங்களில் எழக்கூடாது என தேசிய முன்னனி இளைஞர் பகுதியினர் ஒருமனதாக முடிவெடுத்தனர். தேசியக் கோட்பாட்டின் அடிப்படையில் நாட்டு மக்களிடம் ஒற்றுமையுணர்வை மேலோங்க செய்வதில் தேசிய முன்னணி இளைஞர் பகுதி தொடர்து பாடுபடும் எனவும் உறுதியெடுக்கப்பட்டது.

நாடாளுமன்றம் என்பது ஒருவரை ஒருவர் வெறுமனே சாடி கொள்வதற்கான களம் அல்ல என தேசிய முன்னணி இளைஞர் பகுதித் தலைவர் குறிப்பிட்டார். கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே தொடர்ந்து காணப்படும் ஒருவரை ஒருவர் சாடிக் கொள்ளும் செயலைப் பற்றிக் கருத்துரைக்கயில் அவர் இவ்வாறு கூறியதாக தினாளன் கூறினார்.

மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் தினாளனுடன் புனிதன், பாலமுரளி, கேசவன், சுபாஷ், தியாகேஸ் ஆகியோர்..

இதனிடையே, கோவிட்-19க்குப் பிந்திய இளைஞர்களுக்கான பொருளாதார மீட்சி திட்டத்தைப் பற்றிய ஆலோசனைகளை அரசாங்கத்திற்கு எடுத்துரைப்பதற்காக சிறப்புச் செயற்குழு ஒன்றை அமைப்பதற்கு இக்கூட்டத்தில் தேசிய முன்னணி இளைஞர் பகுதி இணக்கம் கண்டுள்ளது. இந்தச் சிறப்புச் செயற்குழு வழங்கும் ஆலோசனைகள் அனைத்தும் 2021ஆம் ஆண்டு வரவுச் செலவுத் திட்டத்திலும் 12வது மலேசியத் திட்டத்திலும் இணைத்துக் கொள்ளப்படும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

தேசிய முன்னணி இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ அஸ்ராஃப் வஜ்டி டுசுக்கி, இளைஞர்களுக்கான இடைக்காலச் செயற்சிட்டத்தைப் பற்றியும் இக்கூட்டத்தில் பகிர்ந்து கொண்டார். எந்தச் சூழலிலும் மக்கள் நலனுக்கும் இளைஞர் வளத்திற்கும் முன்னுரை வழங்குவதிலிருந்து தேசிய முன்னணி இளைஞர் பகுதி என்றுமே பின்வாங்காது எனவும் அவர் கூறினார்.

இக்கூட்டத்திற்கு மஇகா இளைஞர் பகுதிப் பேராளர்களுக்கு அதன் தேசிய தலைவர் தினாளன் இராஜகோபாலு தலைமையேற்றிருந்த வேளையில், தேசிய மஇகா இளைஞர் பகுதிச் செயலாளர் தியாகேஸ் கணேசன், மத்திய செயற்குழு உறுப்பினர் புனிதன், இளைஞர் பகுதித் தகவல் பிரிவுத் தலைவர் பாலமுரளி, பொருளாளர் கேசவன், உச்சமன்ற உறுப்பினர் சுபாஷ் ஆகியோர் உடன் கலந்து கொண்டனர்.