‘பொன்மனச் செம்மல்’ – ‘புரட்சித் தலைவர்’ டாக்டர் எம்ஜிஆர் அவதரித்து நூறாண்டுகள் பூர்த்தியடைந்துள்ளது. இப்பெருமகனார் மறைந்து 30 ஆண்டுகள் கடந்த போதிலும், பல கோடி ரசிகர் பெருமக்களின் மனங்களில் இன்னும் நீக்கமற வாழ்ந்து கொண்டிருக்கிறார். சீர்மிகு வாழ்க்கை நெறிமுறைகளுக்கு ஓர் உதாரணப் புருஷராக வாழ்ந்துக் காட்டியவரை, புதிய தலைமுறையினரும் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கோடு ‘எம்ஜிஆர் அனைத்துலக மாநாடு & நூற்றாண்டு விழா’ தலைநகரில் நடத்தப்படுகிறது.

அதனை முன்னிட்டு அவரின் அரசியல் சமூகம் சார்ந்த அரிய புகைப்படங்களை எம்.ஜி.ஆர். அனைத்துலக மாநாடு ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ளார்கள். இந்த மாநாட்டின் ஏற்பாட்டாளரான மணிவாசகம் கேட்டுக்கொண்டதற்கிணங்க மலேசியாவிற்கான இந்திய தூதர் திருமூர்த்தி இந்த தொகுப்பினை வழங்கியுள்ளார். அனேகன் வாசகர்களுக்கான அந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ள சில புகைப்படஙள்…