புத்ராஜெயா, ஆக. 2-

மலேசியாவில் இன்று கொவிட் 19 நோய் தொற்று காரணமாக 14 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் மலேசியாவில் உள்ளவர்கள் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு வெளிநாட்டவர் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

இதனிடையே இன்று 17 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த காரணமாக இதுவரையில் இந்த நோய் தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,999 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 210 பேர் இன்னமும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களின் இருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் செயற்கை சுவாச உதவியை நாடியுள்ளார்.

இந்த நோய் தொற்றின் காரணமாக மரணச் சம்பவங்கள் நிகழவில்லை. அதனால் கோவிட் 19 காரணமாக மலேசியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 125ஆக நீடிக்கின்றது.

இன்று 17 பேர் குணமடைந்துள்ளார்கள். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,664 ஆக அதிகரித்துள்ளது. இது 96.28 விடுக்காடு ஆகும்