கோலாலம்பூர், ஆக. 3-

பிகேஆர் முன்னாள் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலி பெர்மாதாங் பாவ் விவகாரத்தில் “தனிப்பட்ட பழிவாங்கலை” கொண்டு வர வேண்டாம் என்று பிகேஆர் புக்கிட் தெங்கா சட்டமன்ற உறுப்பினர் கூய் ஹ்சியாவ் லியுங் நினைவுபடுத்தினார்.

பிகேஆர் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்தன் குடும்பத்தினர் பிடியிலிருந்து விடைபெற்று பெர்மாதாங் பாவ் மக்கள் “உண்மையான” மாற்றத்தைக் காண வேண்டிய நேரம் இது என்று அஸ்மின் கூறியதை அடுத்து கூய் இவ்வாறு கூறினார்.

“அஸ்மின் பி.கே.ஆரில் நிறையக் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளார்.

“இரண்டாவதாக, அடுத்த தேர்தலில் பினாங்குக்கு ‘உண்மையான’ மாற்றத்தைக் கொண்டுவர அஸ்மின் அலி மற்றும் தேசியக் கூட்டணி (PN) விருப்பம் ஒரு கனவு மட்டுமே” என்று அவர் கூறினார்.

அஸ்மினும் அவரது ஆதரவாளர்களும் தங்கள் நேரம் முடிந்துவிட்டதை அறிந்திருக்கின்றார்கள். பொதுத் தேர்தல் வந்தவுடன் அது முற்றிலும் நிறைவடையும் என்றும் கூய் கூறினார்.

“நேரம் வரும்போது, ​​துரோகிகளையும் கட்சித் தாவிய தவளைகளையும் எவ்வாறு கையாள்வது என பினாங்கு மக்களுக்குத் தெரியும்” ஆட்சி மாற்றத்திற்காக அஸ்மினும் அவரது குழுவினரும் முன்னெடுத்த நடவடிக்கை அனைவருக்கும் தெரியுமென அவர் சுட்டிக் காட்டினார்.