புத்ராஜெயா, ஆக. 3-

மலேசியாவில் இன்று கொவிட் 19 நோய் தொற்று காரணமாக 2 சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன. கிருமித் தொற்றுக்கு ஆளானவர்கள் இருவருமே மலேசியாவைச் சார்ந்தவர்கள்.

இதனிடையே இன்று 4 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த காரணமாக இதுவரையில் இந்த நோய் தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9,001 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 208 பேர் இன்னமும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களின் ஒருவர் மட்டுமே அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நோய் தொற்றின் காரணமாக மரணச் சம்பவங்கள் நிகழவில்லை. அதனால் கொவிட் 19 காரணமாக மலேசியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 125ஆக நீடிக்கின்றது.

இன்று 4 பேர் குணமடைந்துள்ளார்கள். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,664 ஆக அதிகரித்துள்ளது. இது 96.30 விடுக்காடு ஆகும்