கேரளா, ஆக. 8-

துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கருப்பூர் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது.

அந்த விமானம் தரையிறங்கும்போது ஓடுதளத்தில் சறுக்கி விபத்திற்குள்ளானது. இதனால் அருகில் உள்ள 30 அடி பள்ளத்திற்குள் விமானம் சென்றது. அந்த விமானத்தில் 174 பயணிகள் இருந்தனர். இரண்டு விமானிகள், 4 பணியாளர்கள் இருந்துள்ளனர். பயணம் செய்தவர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்றதா? என்பது குறித்து முழு விவரம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

விமானத்தின் முன்பகுதியில் பயணம் செய்தவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானி இறந்ததாக தகவல் கூறப்பட்டுள்ளது.