பெட்டாலிங் ஜெயா, ஆக. 14

ரோன் 95, 97 பெட்ரோல் விலை ஏற்றம் கண்டுள்ள நிலையில் டீசல் விலை 3 சென்ட் உயர்ந்துள்ளது.. ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை ரோன் 95 பெட்ரோல் விலை ரிம 1.63 சென்னிலிருந்து 5 சென்ட் உயர்ந்து ரிம. 1.68க்கு விற்கப்படும்.

அதேபோல் ரோன் 97 பெட்ரோல் விலை ரிம 1.93 சென்னிலிருந்து 5 சென்ட் உயர்ந்து ரிம1.98க்கு விற்கப்படுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, டீசல் விலை 3 சென்ட் உயர்ந்து ரிம 1.82க்கு விற்கப்படும். முன்னதாக அதன் விலை ரிம 1.79ஆக இருந்தது. இந்தப் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று நள்ளிரவு தொடங்கி ஆகஸ்ட் 21ஆம் தேதி வரையில் அமலில் இருக்கும்.