சென்னை, ஆக. 14-

COVID-19க்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமண்யம் அவரது உடல்நிலையில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

எம்.ஜி.எம் மருத்துவமனையில், அவர் ஒரு வாரத்திற்கும் மேலாகச் சிகிச்சை பெற்று வருகிறார், பாடகரின் உடல்நிலை மோசமடைந்துள்ளது, அவர் ஆபத்தான நிலையில் உள்ளார் மற்றும் செயற்கை கருவியின் உதவியை நாடியுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மருத்துவமனையின் அறிக்கை பின்வருமாறு: “ஆகஸ்ட் 5, 2020 முதல் கொவிட் அறிகுறிகளுக்காக எம்ஜிஎம் ஹெல்த்கேரில் அனுமதிக்கப்பட்ட  எஸ்.பி.பலசுப்பிரமணியத்தின் ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் 13, 2020 அன்று இரவு அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. 

நிபுணர் மருத்துவக் குழுவின் ஆலோசனையின் அடிப்படையில், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ஐ.சி.யூ) மாற்றப்பட்டார், அவர் செயற்கை சுவாச கருவியின் உதவியில் இருக்கிறார்.

அவரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவர் தற்போது சிறப்புக் குழு  நிபுணர்களால் கவனிக்கப்பட்டு வருகிறார் அவரது  மருத்துவ பதிவுகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகின்றன. ” எனக் கூறப்பட்டுள்ளது

எஸ்பி பாலசுப்ரமணியம் கொவிட் 19 கிருமித் தொற்றிலிருந்து குணமடைய வேண்டுமென அனைவரும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.