விடுதலை புலிகளின் மலேசியத் தடையை ஓட்டுக்காக பேசும் அரசியல்வாதி பெருமக்களுக்கு ஒரு வேண்டுகோள்!

உலகில் தமிழனுக்கென்று ஒரு நாடு வேண்டும் என போராடியவர்களுக்கு இந்த தமிழ் சமூகம் எப்போதும் நன்றி தெரிவுக்கும். இதை தமிழர்கள் மனதிலுருந்து யாராலும் மாற்றவே முடியாது!

இப்போது சில புன்னியவான்கள் சொந்த பணத்தை போட்டு, வாழ்க்கையை அர்பணித்து ஒரு வழக்கை போட்டுள்ளனர். தயவு செய்து இந்த வழக்கு முழுமையாக முடியட்டும். உங்கள் ஆதரவை ஆதங்கத்தை பிறகு பேசுங்கள்! ஏன் ?

எதிர்கட்சியை சார்ந்தவர்கள் இப்போது பேசும் போது, அரசியல் நிலைத்தன்மை இல்லாத இருக்கும் இந்த நேரத்தில் எதாவது ஒரு காரணம் சொல்லி எதிர்கட்சியை முடக்கும் விதமாக விடுதலை புலிகளின் மீது வெறுப்பை உண்டாக்குவர். மலேசியா போன்ற பெரும்பான்மை இன அரசியல் நடக்கும் நாட்டில் , ஓட்டுக்காக எதையும் செய்யு கூடிய ஆட்கள் பல விதமாக புரளிகளையும், பொய்களையும் கூறி வழக்கை திசைத்திருப்ப வாய்ப்பு உண்டு.

எதிர்கட்சியினர் இதை பேச பேச, மலாய் சமூகத்திற்கு இன்னும் வெறுப்பு அதிகம் ஆகும். Mahkamah Tinggiயில் வெற்றிப்பெற்றாலும், Mahkamah Perseketuan, Mahkamah Rayuan என்று வீம்புக்கென்றே வழக்கு போட்டால்என்ன செய்வது?

விடுதலை புலிகளை அரசியலாக்காதீர்கள் உறவுகளே! தமிழர்களுக்கு விழுப்புணர்வு வந்துவிட்டால் அதுவே உங்கள் மீது வெறுப்பாக மாறும். ஒவ்வொறு Novemberஉம் வரும் போது நீங்கள் ஓட்டுக்காக செய்த அரசியல் துரோகத்தை நாங்கள் சேர்த்தே நினைவு கூறுவோம்.

விடுதலை புலிகள் உங்கள் வாக்கு வங்கிகள் அல்ல!
வழக்கு முடியட்டும்! தமிழர் இருள் விடியட்டும்!