சென்னை, ஆக 21-
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் கொரோனா நோய் தொற்றால் சென்னையில் உள்ள எம்ஜிஎம் என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலையில் சில நாட்கள் முன்னேற்றம் தென்பட்டாலும் பல நாட்கள் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக தான் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் நேற்று இரவு மலேசிய நேரப்படி 11 மணி அளவில் எம்ஜிஎம் மருத்துவமனை ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், கொரானா நோய்த்தொற்று காரணமாக எம்ஜிஎம் மருத்துமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ள எஸ் பி பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

வென்டிலேட்டர் மற்றும் எக்மோ சிகிச்சைகள் அவருக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஐசியூவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. தேசிய மற்றும் சர்வதேச மருத்துவத்துறை நிபுணர்களுடன் எங்களது மருத்துவ குழுவினர் தொடர்பில் இருக்கிறார்கள். தொடர்ந்து எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலையை கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.html