ஐரோப்பிய வெற்றியாளர் கிண்ணத்தை 6ஆவது முறையாகக் கைப்பற்றி ஜெர்மனியின் பாயன் முனீக் கால்பந்து அணி மகத்தான சாதனையைப் புரிந்துள்ளது. 

திங்கட்கிழமை அதிகாலை 3 மணிக்கு நடந்த ஆட்டத்தில் உலகின் முன்னணி ஆட்டக்காரர்களைக் கொண்டிருக்கும் பிரான்ஸின் பிஎஸ்ஜி அணியை 0-1 என்ற கோல் எண்ணிக்கையில் பாயன் மூனிக் வீழ்த்தியது.

அவ்வணிக்கான ஒரே கோலை ஆட்டத்தில் 59ஆவது நிமிடத்தில் கிங்க்ஸ்லி கேமன் அடித்தார். இவர் தமது கால்பந்து பயணத்தை பிஎஸ்ஜி அணியில் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோஸ்வா கிமீச் கொடுத்த பந்தை அவர் தலையால் முட்டி கோலாகினார்.

கடந்த நவம்பர் மாதம் பாயன் முனீக் அணியில் நிர்வாகி பொறுப்பிலிருந்து நிகோ கோவிக் நீக்கப்பட்டபோது இடைக்கால நிர்வாகியாகப் பொறுப்பேற்ற ஹன்சி பிலிக், தமது தலைமையில் அவ்வணியை ஜெர்மன் ஐரோப்பிய வெற்றியாளர் கிண்ணத்தை வென்றுள்ளது. அதோடு ஜெர்மனியின்  பொன்சஸ்லீகா கிண்ணத்தைத் தொடர்ந்து 8 முறை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்ஜி அணியின் முன்னணி தாக்குதல் ஆட்டக்காரர்களான கெலியன் இம்பாப்பே, நெய்மார், டி மாரியா ஆகியோர் நடத்திய அனைத்து தாக்குதல்களையும் பாயன் முனீக் அணியின் கோல் காவலரும் கேப்டனுமான மெனுவல் நொயர் அதிரடியாக தடுத்து நிறுத்தினார். இவர்தான் ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.