செவ்வாய்க்கிழமை, ஜூன் 25, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > உலகம் > ஐ.எஸ். தலைவர் அல் பாக்தாதி அமெரிக்கா தாக்குதலில் கொல்லப்படவில்லை: அமெரிக்கா தகவல்
உலகம்

ஐ.எஸ். தலைவர் அல் பாக்தாதி அமெரிக்கா தாக்குதலில் கொல்லப்படவில்லை: அமெரிக்கா தகவல்

வாஷிங்டன், செப் 2-

உலகை அச்சுறுத்தி வந்த ஐ.எஸ். அமைப்பின் தலைவர் இப்ராகிம் அபு பக்கர் அல் பாக்தாதி (வயது 45) ரஷிய தாக்குதலில் கொல்லப்படவில்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

இவரை உயிரோடு பிடித்து தருவோருக்கும் அல்லது கொலை செய்ய தகவல்கள் கொடுப்போருக்கும் 10 மில்லியன் டாலர் ரொக்க பரிசை வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தது. ஆனால் அவரை பிடிக்க முடியவில்லை.

ஈராக்கின் மொசூல் நகரம் சுற்றி சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது, அல் பாக்தாதியும் அகப்பட்டுக்கொண்டு விட்டார் என்றெல்லாம் தகவல்கள் கசிந்த வண்ணமாகவே இருந்ததே தவிர அது நிகழ்ந்ததாக உறுதிப்படுத்தப்படவில்லை. இதனிடையே, கடந்த ஜூன் மாதம், சிரியாவில் உள்ள ராக்கா நகரில் ரஷியாவின் சுகோய் போர் விமானங்கள் கடுமையான குண்டுவீச்சில் ஈடுபட்டன.

இந்த குண்டு வீச்சில் சிக்கி அல் பாக்தாதி கொல்லப்பட்டு விட்டார் என்று ரஷிய ராணுவம் அறிவித்திருந்தது. ஆனால் இதுபற்றி ஐ.எஸ். அமைப்பு எந்த தகவலையும் வெளியிடவில்லை.  ஆனால் அல் பாக்தாதி, ரஷிய தாக்குதலில் கொல்லப்படவில்லை என்ற தகவலை அமெரிக்கா வெளியிட்டு உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன