முகப்பு > மற்றவை > ம.இ.காவை விட்டு நழுவுகின்றதா கேமரன் மலை தொகுதி?
மற்றவைமுதன்மைச் செய்திகள்

ம.இ.காவை விட்டு நழுவுகின்றதா கேமரன் மலை தொகுதி?

ஈப்போ, செப்.4-

        14ஆவது பொதுத்தேர்தலில் கேமரன் மலை தொகுதியில் போட்டியிடவிருப்பதாக மை பிபிபியின் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் அறிவித்துள்ளது குறித்து அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் தேசிய முன்னணியின் கூட்டத்தில் தாம் பேசவிருப்பதாக ம.இ.காவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார்.

        சம்பந்தப்பட்ட கோரிக்கையை மை பிபிபி எழுப்புவது வழக்கமான ஒன்றுதான். இருந்த போதிலும் அது தொடர்பான அனைத்து முடிவுகளை தேசிய முன்னணியின் தலைமைத்துவமே எடுக்கும் என்றும் தேசிய முன்னணி தன்னை தேர்ந்தெடுக்காவிட்டால் சுயேட்சை வேட்பாளராக அத்தொகுதியில் அவர் போட்டியிடவிருப்பதாக மிரட்டல் விடுத்திருப்பது குறித்தும் அவர் கேள்வியெழுப்பினார்.

        நான் தேசிய முன்னணியின் கொள்கை அடிப்படையில் பேசுகின்றேன். ஆனால், கேவியஸ் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடவிருப்பதாக அறிவித்தால் பிறகு யார் வேண்டுமானாலும் சுயேட்சை வேட்பாளர்களாக போட்டியிட முடியும். பிறகு தேசிய முன்னணியின் உறுப்பு கட்சிகளின் நிலை என்ன? என நேற்று 71ஆவது பேராக் ம.இ.கா. பேராளர் மாநாட்டில் கலந்துக்கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த டத்தோஸ்ரீ சுப்ரமணியம் கேள்வியெழுப்பினார்.

        இவ்விவகாரம் குறித்து பேசுவதற்கு கேவியஸ் என்னை சந்திப்பதற்கு அனுமதி கேட்டுள்ளார். ஆனால், அந்த சந்திப்பு நடைபெறுவதற்கு முன்பே அவர் இவ்வாறான அறிக்கையை வெளியிட்டுள்ளார் என அவர் கூறினார்.

        இதனிடையே, இம்மாநாட்டில் உரையாற்றிய டத்தோஸ்ரீ சுப்ரமணியம், டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தற்போது எதிர்கட்சியை சேர்ந்தவராகிவிட்டதால் கேவியஸ் ஜொகூரிலுள்ள பாகோ நாடாளுமன்றத்தில் போட்டியிடலாம் என பரிந்துரை செய்தார்.

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன