கோலாலம்பூர், செப். 8-

ஜூலை 30ஆம் தேதி சபா மாநிலச் சட்டசபையைக் கலைக்க யாங் டிபெர்டுவா நெகிரி சபாவின் முடிவு தொடர்பாக முன்னாள் சபா மந்திரி பெசார் மூசா அமான் உட்பட 32 சட்டமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

அபுபக்கர் ஜெய்ஸ் மற்றும் சுபாங் லியான் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவின் தலைவராக இருந்த நீதிபதி டத்தோ அப்துல் கரிம் அப்துல் ஜலீல், கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு நிலுவையில் உள்ள நிலையில், இந்த முடிவை இன்று ஒத்திவைக்க வலியுறுத்திய சட்டமன்ற உறுப்பினரின் வேண்டுகோளையும் தள்ளுபடி செய்தார்.

இந்த முடிவின் காரணமாகச் சபா மாநிலத் தேர்தல் திட்டமிட்டபடி நடக்குமென என்று பெர்னாமா தெரிவித்துள்ளது.

சபா மாநிலத் தேர்தலின் வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 12ஆம் தேதியும் வாக்களிப்பு 26ஆம் தேதியும் நடக்குமெனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.