புதன்கிழமை, நவம்பர் 13, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > பட்ஜெட் 2018: மக்களின் ஆலோசனைகளை பெற சிறப்பு வலைப்பக்கம்!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

பட்ஜெட் 2018: மக்களின் ஆலோசனைகளை பெற சிறப்பு வலைப்பக்கம்!

கோலாலம்பூர், செப். 4-

2018ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் குறித்து மக்களின் பரிந்துரைகளை பெறுவதற்காக அரசாங்கம் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் வலைதளத்தில் https://bajet2018.najibrazak.com எனும் சிறப்பு வலைப்பக்கத்தை இன்று தொடங்கவுள்ளது.

இந்த வலைப்பக்கம் இன்று தொடங்கி வருகின்ற 18ஆம் தேதி வரையில் செயல்படும். இது குறித்து பிரதமரின் பத்திரிக்கை செயலாளர் டத்தோஸ்ரீ தெங்கு சரிபுடின் தெங்கு அஹ்மட் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டின் வருடாந்திர பட்ஜெட் உருவாக்கத்தில் நாட்டு மக்களின் கருத்துகளும் பரிந்துரைகளும் முக்கிய பங்கு வகிப்பதாகவும் ஒவ்வொரு ஆண்டும் மக்களின் கருத்துகளை அரசாங்கம் கண்டறிவது போலவே இம்முறையும் இந்த சிறப்பு வலைப்பக்கத்தின் வாயிலாக கண்டறியப்படவிருப்பதாக தெரிவித்தார்.

அடுத்த மாதம் 27ஆம் தேதி பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டிற்கு தேவையான 14 பிரிவுகள் இந்த வலைப்பக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பொருளாதாரம், வாழ்க்கை செலவினம், வீடமைப்பு மற்றும் நகர்புற வாழ்க்கை, சுகாதார பாதுகாப்பு சேவை, போக்குவரத்து மற்றும் அடிப்படை கட்டமைப்பு, புறநகர் மேம்பாடு, சுற்றுச்சூழல் மற்றும் விவசாயம். இளைஞர் மற்றும் விளையாட்டு, கலை மற்றும் சுற்றுலா, பொது பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை உள்ளிட்டவை  இதில் அடங்குவதாக டத்தோஸ்ரீ தெங்கு சரிபுடின் குறிப்பிட்டார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன