பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து  காஜல் பசுபதி வெளியேற்றப்பட்டார். அவர் வெளியில் வந்தபிறகு ரைசா வெளியேறியபோது ஏன் கண்கலங்கினீர்கள் என கமல் கேட்டார்.

அதற்கு காஜல், “அது ஏன் என்று எனக்கே புரியவில்லை, என்னை அறியாமல் கண்கலங்கிவிட்டேன். அழகனா பொண்ணு! அவருக்கு பேன்ஸ் இருந்தாங்க, ஆன அவ என்னோடு சேர்ந்து இருந்ததால் தான் ரசிகர்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை என நினைத்தேன்” என கூறினார்.

அதற்கு கமல் “ரசிகர்களை புரிந்துகொள்ள என்னால் இதுநாள்வரை முடியவில்லை, ஆனால் நீங்கள் செய்துவிட்டிர்கள். நான் உங்களிடம் டியுஷன் வந்து கத்துகிறேன்” என கூறினார்.