அனைத்து மலேசியர்களும் SME-க்களுக்கான ‘Power Up!’ எனும் வணிக வெபினாரில் கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றனர்.

தொழில் வல்லுநர்களிடமிருந்து நுணுக்கங்களை கற்றுக் கொள்வதோடு தொலைக்காட்சி மற்றும் வானொலி நேர்காணல்களை வெல்ல ஓர் அறிய வாய்ப்பைப் பெறுங்கள்

  • ‘Power Up!’ வெபினாரைப் பற்றின விபரங்கள்
  • செப்டம்பர் 30, 2020 அன்று பிற்பகல் 2 மணியளவில் நடைபெரும், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (SME) உள்ளிட்ட உள்ளூர் வணிகங்களுக்கு நுணுக்கங்களை வழங்கும் தொழில் வல்லுநர்கள் கலந்து சிறப்பிக்கும் ‘Power Up! – Strategising Your Business For Post-Pandemic Success’ (‘Power Up!’) எனும் வெபினாரில் (webinar) கலந்துப் பயனடைய அனைத்து மலேசியர்களும் அழைக்கப்படுகின்றனர்.
  • வெபினாரின் போது, பங்கேற்பாளர்கள் புகழ்பெற்ற பேச்சாளர்களின் கருத்துக்களைக் கேட்டறிவர். பேச்சாளர்களின் விபரங்கள் பின்வருமாறு:
  • டத்தோ டாக்டர் ஏ.டி. குமாரராஜா, மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சம்மேளனத்தின் (Malaysian Associated Indian Chambers of Commerce and Industry, MAICCI) தலைமைச் செயலாளர்;
  • கணேஷ் குணரத்னம், PwC-இன் இயக்குனர் மற்றும் செயல்பாட்டு மூலதன நிர்வாகத்துறைத் தலைவர் (Working Capital Management Leader); மற்றும்,
  • பேராசிரியர் டாக்டர் காதர் இப்ரஹிம், தன்முனைப்பு பேச்சாளர்.
  • கடினமான காலங்கள் மற்றும் தற்போதைய பொருளாதார நிலைப்பாட்டில் தங்களைத் தக்கவைத்துக்கொள்ள குறிப்புகளை வழங்குவதோடு ‘Power Up!’ பணக் கையிருப்புப் பாதுகாப்பு மற்றும் நிர்வாகம், மேலும் நெருக்கடியின் போது வணிகத்தை இயக்குவதற்கான நேர்மறையான சிந்தனையாற்றல்களைக் கொண்டிருத்தல் போன்றவற்றை சித்தறிக்கும்.
  • இந்த வெபினாரின் கேள்வி பதில் அங்கத்தில், கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்கும் ஐந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்கள் இரண்டு ஒரு மணி நேர நேர்காணல்களை வெல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள்: ராகா வானொலி மற்றும் ஆஸ்ட்ரோ வானவில் எச்டியில் இடம்பெரும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான, ‘விழுதுகள்’ போன்றவற்றில் தங்கள் வணிகத்தைப் பற்றி மேலும் பகிர்ந்துக் கொள்ளும் அறிய வாய்ப்பை பெருவர். ராகா அறிவிப்பாளர், உதயா தொகுத்து வழங்கும் ‘Power Up!’ தமிழில் நடத்தப்படும்.
  • பதிவு செய்ய மற்றும் ‘Power Up!’ பற்றிய மேல் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.