கோலாலம்பூர்,அக் 4-

கொவிட்-19 நோயின் தாக்கத்தினால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில் பொது மக்களும் அன்றாட வாழ்க்கையில் சிரமத்தை எதிர்நோக்கி வந்தனர்.

அந்த வகையில், டிஎஸ்கே சமூகநல இயக்கத்தின் ஏற்பாட்டில் உலு புடு பிபிஆர் குடியிருப்பை சேர்ந்த 15 பி40 பிரிவு குடும்பங்களுக்கு மளிகை பொருட்களை ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான அறங்காவலர் டத்தோ சிவக்குமார் வழங்கினார்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் இருவருக்கு சக்கரநாற்காலியையும் வழங்கினார்.

கொவிட்-19 அச்சுறுத்தி வரும் இந்தக் காலக்கட்டத்தில் சமூகநல இயக்கங்கள் முன்வந்து சிரமங்களை எதிர்நோக்கும் குடும்பங்களுக்கு உதவ முன் வர வேண்டும் என்று ஏற்பாட்டு குழுவினர்கள் கேட்டுக் கொண்டனர்.

மேலும், அரசாங்கம் நிர்ணயித்திருக்கும் செயல்பாட்டு தர விதிமுறைகளை பின்பற்றி கொவிட்-19 நோய் பரவலை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.