கோலாலம்பூர், செப். 7-

மலேசிய தொலைத் தொடர்பு துறை பரிணாம வளர்ச்சி பெற்றுள்ள நிலையில் லைஃப் Mbits Digital நிறுவனத்தின் ஒரு புதிய மின்னியல் தளம் வாடிக்கையாளர்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ளதாக எம்பிட்ஸ் டிஜிட்டல் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி சாரா லியானா நத்தாயா அஸ்மி கூறினார்.

மின்னியல் வாழ்க்கை முறை, மின்னியல் பொருளாதாரம், இடைவிடாத பொழுதுபோக்கு என்று பலதரப்பட்ட அம்சங்களை தாங்கி மலரும் லைஃப் மின்னியல் தளம் இந்தியர்களுக்காக பிரத்தியேக வானம் மின்னியல் தளத்தையும் ஏற்படுத்தித் தந்துள்ளதாக அண்மையில் நடைபெற்ற அறிமுகவிழாவில் சாரா லியானா தெரிவித்தார்.

இந்த லைஃப் மின்னியல் தொலைத் தொடர்பில் முக்கிய அம்சமாக திகழும் வானம் மின்னியல் தளம் அனைத்து மலேசியக் கலைஞர்களுக்கும் ஒரு மைல் கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. மலேசிய திரைப்படங்கள், குறும்படங்கள், கலைநிகழ்ச்சிகள், பாடல்கள், தனிப்பாடல்கள், வீடியோ மியூசிக் என்று பலதரப்பட்ட அம்சங்கள் வானம் மின்னியல் தளத்தில் இடம்பெறும். இதற்கான கட்டணங்களையும் பேசிக் கொள்ளலாம் என்று வானம் மின்னியல் அலைவரிசையின் தலைவர் திவாகர் சுப்பையா கூறினார்.

கோவிட் 19 தொற்று நோயின் தாக்கத்தினால் நாட்டிலும் உலகளாவிய நிலையிலும் மின்னியல் பயன்பாடும் அதன் வளர்ச்சியும் துரிதப்படுத்தியிருக்கிறது. இதன்வழி மக்களுக்கு புதிய வாழ்க்கை நடைமுறையையும் மின்னியல் பொருளாதார வாய்ப்புக்களையும் லைஃப் ஏற்படுத்தித் தந்துள்ளது.

இந்த லைஃப் மின்னியல் தளத்தில் வலம் வரும் வானம் மின்னியல் அலைவரிசையில் மலேசிய இந்தியர்கள் பலதரப்பட்ட அம்சங்களை பார்க்க லைஃப் Mbits Digital நிறுவனம் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளதாக திவாகர் சுப்பையா சொன்னார்.

லைஃப் Mbits Digital நிறுவனத்தின் ஒரு புதிய மின்னியல் வாழ்க்கை முறை தளம். லைஃப் சந்தாதாரர்கள் மின்னியல் முறையில் பதிவு செய்து தங்களது கைபேசி என்னை சுயமாக தேர்வு செய்து கொள்ளலாம். லைஃப் புதிய கைப்பேசி எண் அல்லது நடப்பு தொடர்பு எண்ணில் லைஃப் தொடர்புக்கு பதிவு செய்து கொள்ளலாம் என்று எம்பிட்ஸ் டிஜிட்டல் நிறுவனத்தின் லைஃப் தலைமை தொழிற்நுட்ப அதிகாரி தமிழ்ச்செல்வன் குப்பன் சொன்னார்.

அதுமட்டுமல்லாமல் சுயமாகவே தங்களது திட்டத்தை தேர்வு செய்து தங்களது சந்தாவை மின்னியல் முறையிலேயே செலுத்தவும் முடியும். தங்களது சிம் அட்டையை தபால் மூலம் வீட்டிலேயே பெற்று கொள்ளும் வசதியும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. இவை அனைத்தும் லைஃப் தளத்திலே மின்னியல் முறையில் செய்து முடிக்கலாம் என்றார் தமிழ்ச் செல்வன்.

லைஃப் பலதரப்பட்ட மின்னியல் தளங்களை ஒன்றிணைத்த சிறந்த பொழுது போக்கு தளம். இவை அனைத்தும் சிறப்பான சந்தா கட்டணத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. லைஃபின் கூட்டு மின்னியல் தளங்களின் வாயிலாக ஸ்ட்ரீமிங், மின்னியல் விளையாட்டு, உணவு சேவை, சுற்றுலா சேவை மற்றும் மின்னியல் வாணிபம் போன்றவை லைஃப் சந்தாதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.

லைஃப் தொலைத் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு சேவை பல்லின மொழி கலாச்சாரங்களை ஒன்றிணைத்து உள்ளுர் மற்றும் அனைத்துலக படைப்புகளை பிரபலமடைய செய்கின்றது. உள்ளூர் படைப்புகள் இதன் வழி அனைத்துலக ரீதியில் பீடுநடை போட மலேசியர்களுக்கு பல வாய்ப்புக்களை வழங்குகின்றது. இவை அனைத்தும் மலேசியர்களால் உருவாக்கப்பட்டு மலேசியர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. லைஃப்பை பெறுங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள் என்று தமிழ்ச்செல்வன் கேட்டுக் கொண்டார்.