சுங்கை பூலோ, அக்.15-
மலேசியாவில் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததாலும் பேரரசர் மற்றும் மன்னர்கள் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்று மலேசிய டத்தோக்கள் ஒருங்கிணைப்பு மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நாட்டில் ஆட்சிக்கு வரக்கூடிய எந்த அரசாங்கமாக இருந்தாலும் பேரரசர் மற்றும் மன்னர்களின் சமஸ்தான பரிபாலன உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்று மலேசிய டத்தோக்கள் ஒருங்கிணைப்பு மன்றத்தின் தேசிய உதவித் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் தவத்திரு ஸ்ரீ சுகுந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.

பேரரசர் மற்றும் மன்னர்களின் உரிமைகள் பல அரசாங்கங்களின் ஆட்சியில் தொன்று தொட்டு கடைபிடிக்கப்பட்டு வந்துள்ள வேளையில் இனிவரும் காலங்களிலும் எந்த அரசாங்கம் வந்தாலும் அந்த உரிமைகள் தொடர்ந்து காக்கப்பட வேண்டும் என்று அண்மையில் சுங்கை பூலோ கிளப் ரஹ்மான் புத்ரா மலேசியாவில் நடைபெற்ற மலேசிய டத்தோக்கள் ஒருங்கிணைப்பு மன்ற அதிகாரப்பூர்வ உச்சமன்ற கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ டாக்டர் தவத்திரு ஸ்ரீ சுகுந்தன் தெரிவித்தார்.

இந்த மலேசிய டத்தோக்கள் ஒருங்கிணைப்பு மன்ற உச்சமன்ற கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இதில் கூட்டுறவு கழகம் அமைப்பது குறித்து பரிந்துரை செய்யப்பட்டன. மேலும் நாட்டில் ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கு நிரந்தரமாக உதவிகள் வழங்க பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக ஆதரவற்றவர்கள் இல்லம், முதியோர் இல்லங்களுக்கு தொடர்ந்து உதவிகள் வழங்க பல செயல்திட்டங்கள் பரிந்துரை செய்யப்பட்டதாக டத்தோஸ்ரீ டாக்டர் தவத்திரு ஸ்ரீ சுகுந்தன் கூறினார்.

மலேசிய டத்தோக்கள் ஒருங்கிணைப்பு மன்றம் பரிந்துரை செய்துள்ள கூட்டுறவுக் கழகம், ஏழ்மை நிலை மக்களுக்கான நலத்திட்டங்கள், ஆதரவற்ற இல்லங்கள், முதியோர் இல்லங்கள் என்று அனைத்து மனிதாபிமான உதவிகளும் இனவேற்றுமை பாராமல் மேற்கொள்ளப்படும் வேளையில் இந்நலத்திட்டங்கள் அனைவருக்கும் நன்மை பயக்கும் என்று மலேசிய டத்தோக்கள் ஒருங்கிணைப்பு மன்ற தேசிய உதவித் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸ்ரீ சுகுந்தன் தமது தலைமையுரையில் குறிப்பிட்டார்.

இந்த மலேசிய டத்தோக்கள் ஒருங்கிணைப்பு மன்றத்தின் உச்சமன்ற கூட்டம் அதன் ஸ்தாபகர் டத்தோ பங்ளிமா அஸ்ஹாருல்டா
சால் தலைமையில் நடைபெற்றது. இதில் நாடு தழுவிய நிலையில் இருந்து டத்தோக்கள் பலரும் கலந்து கொண்டனyர். இந்த உச்சமன்ற கூட்டத்தில் டத்தோஸ்ரீ டாக்டர் தவத்திரு ஸ்ரீ சுகுந்தன் தலைமையுரை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.