கோலாலம்பூர், நவம்பர் 21:-

கூட்டரசுப் பிரதேசத்தில் மதுபான உரிமங்கள் தொடர்பான புதியக் கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் அண்மையில் வெளீயிடப்பட்டுள்ளது. மலிவு விலை மதுபானங்கள் தயாரிப்பது, விற்பது, அருந்துவது என முழுமையாக ஒழிப்பு நடவடிக்கையை கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் முன்னெடுத்துள்ளது.

மேலும், கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் (டி.பி.கே.எல்.) கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட விதிமுறைகளில், பலசரக்குக் கடைகளிலும் சீன மருந்துக் கடைகளிலும் 1-10-2021 முதல், மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்படாது என்று கூறியுள்ளது.

இந்த நடவடிக்கை முழுமையாக வரவேற்கத்தக்க ஒன்று எனவும் இந்த முன்னெடுப்புக்காக கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தான் ஶ்ரீ அன்னுவார் மூசாவுக்குத் தனது நன்றியையும் தெரிவிப்பதாக கூட்டரசுப் பிரதேச ம.இ.கா.வின் தகவல் பிரிவு அதிகாரி பாலகுமாரன் தெரிவித்துள்ளார்.