ஈப்போ, திசம்பர் 8:-

பேரா மாநில அரசியல் சூழல் மீண்டும் இன்னொரு சுனாமியால் தக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பரபரப்பாகவே உள்ளது.

அம்மாநிலத்தின் அடுத்த முதல்வர் நியமனம் தொடர்பாக மாநில நிலையிலான அரசியல் கட்சித் தல்லைவர்கள் சுல்தான் நஸ்ரின் ஷாவை சந்தித்தவாறு உள்ளனர்.

இந்நிலையில் எதிர்பாராத விதமாக பேராவின் 11-வது முதல்வரான டத்தோ ஶ்ரீ ஸம்ப்ரி அப்துல் காதர் பேரா மாநில அம்னோவின் தொடர்புக்குழுத் தலைவர் டத்தோ சராணி முகம்மட்டோடு கிந்தா அரண்மனையை விட்டு ஒரே காரில் சுமார் 4.30 மணி அளவில் வெளியேறினார்.

மற்றொரு நிலவரத்தில் அம்மாநிலத்தின் அடுத்த முதல்வர் குறித்து எந்த அரசியல் கட்சியும் பேரா ஆட்சியாளர் சுல்தான் நஸ்ரின் ஷாவை திருப்தியளிக்குமாறு செய்யவில்லை என கிந்தா அரண்மனையின் பேச்சாளர் டத்தோ ஶ்ரீ முகம்மாட் அன்னுவார் ஸைனி தெரிவித்துள்ளார்.