சென்னை, திசம்பர் 8:-

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று அவரின் இரசிகர்கள் குழம்பி வரும் நிலையில், அது தொடர்பாகப் பல்வேறு யூகங்களும், காரணங்களும் வெளிவந்தபடியே உள்ளன.

தனக்கு நிச்சயம் செய்த ஹேமநாத் என்பவருடன் நடிகை சித்ரா ஒன்றாக ஒரே தங்கும் விடுதியில் தங்கியிருந்துள்ளார். அங்கிருந்துதான் படப்பைடிப்புத் தலத்திற்குச் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று நடு இரவில் சித்ரா ஹேமநாத்திடம் தான் குளிக்க செல்வதாகவும், அதனால் வெளியே செல்ல சொன்னதாகவும் தெரிகிறது.

பிறகு, வெகுநேரம் ஆனதால் அறையின் கதவை தட்டியதாகவும், கதவை சித்ரா திறக்காததால் தங்கும் விடுதியின் ஊழியரிடம் சொல்லி மாற்று திறவுகோளை எடுத்துவந்து திறந்து பார்த்தபோது சித்ரா அறையில் உள்ள மின் விசிறியில் தன் புடவையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. இது சம்பந்தமான விசாரணை நடந்து வருகிறது. சித்ராவின் கன்னத்தில் உள்ள காயங்கள் பலவித சந்தேகங்களை தருகிறது.

இரவு நேரத்தில் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டது குழப்பத்தை தருகிறது. இதனிடையே மற்றொரு தகவலும் வெளியாகி உள்ளது. தான் நடிக்கும் சீரியலில் சக நடிகர் ஒருவருடன் முத்தக்காட்சியில் நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாம். இதில் சித்ரா நடிக்கப் போகவும்தான், அதுவே பிரச்சனையாக வெடித்துள்ளதாகவும் சொல்கிறார்கள். இது சம்பந்தமாக ஹேமந்த் சித்ராவுக்கும் வாக்குவாதம் இருந்து வந்துள்ளது.

நேற்றிரவும் இருவருக்கும் அதே வாக்குவாதம் முற்றியதாகத் தெரிகிறது. இதன் விளைவாகவே, சித்ரா தற்கொலை செய்திருக்கலாம் என்கிறார்கள். எனினும், இந்தக் காரணத்தை முழுமையாக ஏற்க முடியவில்லை. முத்த காட்சி என்பது இயல்பாக திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களில் நடக்கக்கூடிய நிகழ்வு. இதையெல்லாம் இயல்ல்பாகப் பார்க்கும் மனநிலை தற்போதைய காலக்கட்டத்தில் ஏற்பட்டுவிட்ட நிலையில், இதுவெல்லாம் ஒரு பிரச்சனையாக இருவருக்கும் நடந்திருக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

அதுமட்டுமல்ல, இவர்கள் அறைக்கு வந்ததே நள்ளிரவு 2.30 மணிக்கு என்கிறார்கள். 3 மணிக்கு சித்ராவின் தற்கொலை நடந்துள்ளது. இடைப்பட்ட அரை மணி நேரத்தில் தகராறு முற்றியிருக்குமா? அல்லது ஏற்கனவே நடந்த தகராறினால் மனம் உடைந்து சித்ரா தற்கொலை முடிவை எடுத்தாரா? என்று தெரியவில்லை.

இப்படி சித்ரா மரணத்தில் நிமிடத்துக்கு நிமிடம் ஒவ்வொரு காரணங்கள் வெளியாகி வந்தாலும், விசாரணையின் முடிவில் தான் உண்மையான, முழுமையான காரணம் என்னவென்று தெரியும். ஆனால், தம்பதிதக்குள் கடந்த சில நாட்களாகவே அடிக்கடி சண்டை வந்ததாக அக்கம்பக்கத்தினரும் காவக்துறையினரிடம் தெரிவித்துள்ளனராம்!

– நன்றி : ஓன் இந்தியா தமிழ்