பெட்டாலிங் ஜெயா, திசம்பர் 20:-

மலேசியாவின் பனிச்சறுக்குத் தாரகை ஶ்ரீ அபிராமி சந்திரன் தற்பொழுது லாத்வியாவில் பனிச்சறுக்குப் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். ஐரோப்பிய நாடுகளின் ஒன்றான லாத்வியாவின் ரீகா நகரில் உலகத்தரப் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

உலகளாவிய நிலையில் தங்கங்களைக் குவித்த ஶ்ரீ அபிராமி, தன்னை அடுத்தக் கட்டத்திற்குத் தயார்படுத்திக்கொள்ளும் நோக்கில் லாத்வியாவில் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

கோவிட்-19 தாக்கத்தால் பல நாடுகள் அனைத்துலக எல்லைகளை மூடியுள்ள நிலையில் ஶ்ரீ அபிராமி தனது தாயாருடன் தற்போது லாத்வியா நாட்டிலேயே தங்க வேண்டியச் சூழலில் உள்ளார்.

Little Abiraame With Big Winter Olympics Dream - Good News %

லாத்வியா நாட்டில் பனிச்சறுக்குப் பயிற்சிக்கு அதிகச் செலவை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக ஶ்ரீ அபிராமியின் பயிற்சிக்காக அவரட்து தந்தை சந்திரன் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ரி. ம. 200,000 பதிப்பு கொண்ட வீட்டையுன் காரையும் விற்றிருக்கிறார். பேலும் அவர் தற்போது 55 வயதை எட்டியிருப்பதால் தனது ஊழியர் சேமநிதி பணத்தையும் அண்மையில் பயன்படுத்தியுள்ளார். கோவிட்-19 தாக்கத்தால் சந்திரனின் வணிகமும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரிய பொருளாதாரச் சிக்கலில் சிக்கியுள்ள அவர் தற்போது வெளிநாட்டில் பனிச்சறுக்குப் பயிற்சிக்காக ஏற்பட்டுள்ள செலவையும் எதிர்நோக்கும் சூழலுக்கு ஆளாகியுள்ளார்.

ஶ்ரீ அபிராமியின் தந்தை சந்திரனுக்கு கிள்ளானைச் சேர்ந்த ஒரு தொழில்முனைவர்ரிடமிருந்தும் சில நண்பர்களிடமிருந்தும் உதவிகள் கிடைக்கப்பெற்றார். இருந்தும் அவ்வுதவி போதுமானதாக இல்லை.

உலகப் போட்டிகளில் வெற்றி பெற்ற பின்னர் முன்னாள் பிரதமர் துன் மகாதீர், முன்னாள் துணைப் பிரதமர் வான் அஸிஸா இஸ்மாயில், இன்னும் பல முக்கியத் தலைவர்களும் ஶ்ரீ அபிராமிக்கு வாழ்த்துகளைச் சொன்னார்கள். ஆனால், உதவி செய்ய அவர்கள் யாருமே முற்படவில்லை என சந்திரன் தெரிவ்வித்துள்ளார்.

பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ஆனால், அவற்றில் சில வாக்குறுதிகளே நிறைவேற்றப்பட்டன. கோவிட்-19 பரவல் இல்லை என்றால் நானே என் மகளின் பயிற்சி செலவினை முழுதாய் ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், சூழல் தற்பொழுது வேறு மாதிரியாகி விட்டது. விளையாட்டு துறை அமைச்சிடம் இருந்து உதவி கிடைக்குமா என எதிர்ப்பார்க்கிறேன். அபிராமியின் வெற்றிப் பயணத்துக்கு முழுதாய் ஸ்பான்சர் செய்ய வேண்டாம். என்னால் நிதியை ஒவ்வோர் ஆண்டும் முயற்சித்து தயார் செய்து  விட முடியும். ஆனால், அவளின் பயிற்சிச் செலவு விலை உயர்ந்ததாய் உள்ளதால் தள்ளாடுகிறேன்

“ஏவ்வளவு முடியுமோ அவ்வளவு உழைப்பை அபிராமி போடுகிறாள். என்னால் எவ்வளவு முடியுமோ, அது வரையில் நானும் அவளின் கனவுக்கு ஆதரவாக இருப்பேன். ஆனால், இப்போதுள்ளச் சூழலில் உதவிகள் கிடைக்காவிட்டால், அடுத்தாண்டுக்கானப் பயிற்சியைத் தொடராமல் அபிராமியை வீடு திரும்பச் சொல்வதைத் தவிர வேறு வழியில்லை” என ஶ்ரீ அபிராமியின் தந்தை சந்திரன்  தழுதழுத்தக் குரலோடு தெரிவித்துள்ளார்.

3 வயது முதல் இந்த விளையாட்டில் ஈடுபட்டு உலகளாவிய நிலையில் மலேசியாவுக்குத் தங்கங்களை வாரி குவித்த பனிச்சறுக்குத் தாரகை ஶ்ரீ அபிராமியின் கனவு கரைந்திடுமா ?