முகப்பு > முதன்மைச் செய்திகள் > பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு
முதன்மைச் செய்திகள்

பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு

கோலாலம்பூர், செப். 6 –

பெட்ரோல் விலை 4 காசு உயர்ந்துள்ள நிலையில் டீசல் விலை ஒரு காசு உயர்ந்துள்ளது. செப்டம்பர் இரண்டாம் வாரம் முழுவதும் ரோன் 95 பெட்ரோல் விலை 2.16 காசிலிருந்து 4 காசு உயர்ந்து 2.20 காசுக்கு விற்கப்படும்.

அதேபோல் ரோன் 97 பெட்ரோல் விலை 2.44 காசிலிருந்து 4 காசு உயர்ந்து 2.48 காசுக்கு விற்கப்படுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, டீசல் விலை ஒரு காசு உயர்வு கண்டு 2.15 காசுக்கு விற்கப்படும். இந்தப் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளை தொடங்கி செப்டம்பர் 13ஆம் தேதி வரையில் அமலில் இருக்கும்.

 

 

 

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன