கோலாலம்பூர், டிச. 11
தளபதி விஜய் – விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் திரைப்படம் மலேசியாவில் வெளிவராது என லோட்டஸ் குழுமத்தின் தலைவர் டான்ஶ்ரீ ரெனா துரைச்சிங்கம் தெரிவித்தார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு 6 மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டாலும் நிபந்தனைக்கு உட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு, மீட்புநிலை நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மாநிலங்களிலும் பொழுதுபோக்கு நடவடிக்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதை அவர் உறுதிப்படுத்தினார்.

வர்த்தக ரீதியில் இது மிகப் பெரிய பாதிப்பாக இருந்தாலும் நடப்பு சூழ்நிலை சாதகமாக இல்லை. மாஸ்டர் மலேசியாவில் வெளிவராது.

2 வாரங்களுக்குப் பிறகு இத்திரைப்படத்தைத் திரையிடுவதற்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதை அறிந்துக் கொண்ட பிறகுதான் அடுத்தக்கட்ட அறிவிப்பை வெளியிட முடியுமெனத் தான்ஶ்ரீ துரைச்சிங்கம் தெரிவித்தார்.