மெர்போக், சனவரி 22:-

இவ்வாண்டு தைப்பூசத்தை முன்னிட்டு கெடா மாநிலத்தில் விடுமுறை வழங்கப்பட்டால் எவ்வித நட்டமும் ஏற்படாது கெடா, மெர்கோப் நாடாளுமன்ற உறுப்பினர் நுரின் அய்னா தெரிவித்துள்ளார்.

அந்த விழாக்கால விடுமுறை நிலைநிறுத்தப்பட வேண்டும் என அவர் கூறினார்.

இது மாதிரியான விடுமுறைகள் வழங்கப்படுவதால் கலாச்சர ஒற்றூமை மதிக்கப்படும். மேலும், வீட்டிலேயே அனைவரும் பாதுகாப்பாக இருப்பர்.

இதனிடையே, பல்லினம் கொண்ட மலேசிய மக்களின் பண்பாட்டு பன்முகத் தன்மையை கெடா மாநில மந்திரி பெசார் முகம்மாட் சனுசி முகம்மாட் நோர் மதிக்கத் தவறிவிட்டதாக பிகேஆர் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மால் நாசிர் தெரிவித்தார்.

மேலும், பாஸ் கட்சியைப் பிரதிநிதிக்கும் முகம்மாட் சனுசி மலாய் – இஸ்லாம் அரசாங்கத்தின் ஒரு மோசமான எடுத்துக்காட்டு என ஜொகூர் பாருவின் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் மேலும் கூறினார். 

இஸ்லாம் சமயம் மற்ற எந்த சமயத்தின்  மீதும் இனத்த்தின் மீதும் அடக்கமுறையைக் காட்டக் கற்றுக் கொடுக்கவில்லை.

எனவே, முகம்மாட் சனுசி இனவாதத்தைத் தூண்டும் வகையிலும் நாட்டின் அமைதியைக் குலைக்கும் வகையில் தான் அறிவித்த முடிவைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் .

என அவர் வலியுறுத்தினார்.