பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 23:-

தைப்பூசத்தை முன்னிட்டு பத்துமலையிலிருந்து முருகக் கடவுளைக் கொண்டுவரும் தேர் ஊர்வலத்திற்கு தேசியப் பாதுகாப்பு மன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஆனால், அந்த அனுமதியானது டிபிகேஎல்-இன் கண்காணிப்புடன் நடைபெறும் என கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அன்னுவார் மூசா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

27ஆம் நாள் தொடங்கும் தேர் ஊர்வலம் எங்கும் நிற்கக்கூடாது.

10 பேருக்கு மேல் தேருடன் ஊர்வலத்தில் இணைந்து கொள்ளக் கூடாது.

மேளதாள வாத்தியக் கருவிகளும் பாடலிசைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் திரும்பும் தேர் ஊர்வலம் இதே வழிமுறையில் தான் நடக்கவேண்டும்

என அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.