ஈப்போ | பிப்பரவரி 1:-

2021 ஆம் ஆண்டின் தைப்பூச விழா இது வரை இல்லாத புது முறையில் கொண்டாடப்பட்ட ஒன்று. கோவிட்-19 தொற்றின் காரணத்தினால் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு இணங்க இவ்வாண்டு தைப்பூச விழா வுக்குத் தடை விதிக்கப்பட்டது.

தைப்பூசக் கொண்டாட்டம் இல்லை என்ற கவலையில் பலர் இருந்தாலும் வீட்டிலிருந்தே முருகக் கடவுளை வரவழைத்து வழிப்பட முடியும் நம்பிக்கையில் தன் மகளை முருகனாக அலங்கரித்துக் கொண்டாடினார் காவல்துறை ஆய்வாளர் கோபி பிரசன்னா இணையினர்.

பேரா மாநிலத்தைச் சேர்ந்த கோபி இணையினரின் நான்கு மாதக் கடைக்குட்டி குழந்தை யடானா சாய். அக்ககுழந்தையைத் தைப்பூச நாளன்று முருகக் கடவுள் போல் அலங்கரித்து இனிப்புப் பலகாரங்கள் வழங்கி தைப்பூசத்தைக் கொண்டாடியுள்ளனர்.

மயில் இறகுகள் பின்னணியில் இருக்கும் யடானாவின் நிழற்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிவேகமாகப் பரவி வருகிறது.