கோலாலம்பூர் | பிப்பரவரி 1 :-

நாட்டின் முன்னாள் ஸ்குவாஷ் வீராங்கனை டத்தோ நிக்கோல் டேவிட் எல்லா காலத்திலும் சிறந்த விளையாட்டாளர் விருதை சற்று முன்னர் வென்றுள்ளார்.

உலக விளையாட்டுக் கூட்டமைப்பு நடத்தும் அந்த விருதுக்கானப் போட்டிக்கு ஆசியாவைப் பிரநிதித்த ஒரெ விளையாட்டாளர் இவராவார்.

கடந்த 109 மாதங்களாக உலகின் முதல் நிலை விளையாட்டாளர் எனும் தர வரிசையில் இருந்த நிக்கோல் டேவிட்டுடன் உலக நாடுகளைச் சேர்ந்த 23 பேர் அந்தப் போட்டியில் கலந்து கொண்டனர்.

கடந்த சனவரி 9ஆம் நாள் தொடங்கி இணையத் தளத்தில் வாக்குகள் திரப்பட்ட நிலையில் இன்று இரவு 9.00 மணி அளவில் அது ஒரு நிறைவை அடைந்தது.

நிக்கோல் டேவிட்டுக்கு 318,943 வாக்குகள் கிடைத்து அந்த விருதை வென்றுள்ளார்.

இந்த விருதைப் பெற்றதில் தாம் மிகுந்த பெருமை கொள்வதாகவும் தனக்காக வாக்களித்த ஸ்குவாஷ் விளையாட்டுத் துறையைச் சார்ந்தவர்களுக்கும் மலேசிய மக்களுக்கும் தனது நன்றியை நிக்கோல் தெரிவித்துக் கொண்டார்.

இந்த வெற்றி தனக்கு ஓர் இன்ப அதிர்ச்சியாக இருந்ததாகவும் இதன் பொருட்டு ஸ்குவாஷ் விளையாட்டு பலரின் கவனத்தை ஈர்க்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மலேசியாவையும் ஆசியாவ்வையும் பிரதிநிதித்ததில் மிகுந்த பெருமை அடைகிறேன்.

அதே போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கயிறு இழுக்கும் வீரர் ஜேம்ஸ் கெஹோவை விட ஏறத்தாழ மூன்று மடங்கு வாக்குகள் வேறுபாட்டில் முன்னணி வகித்தார் நிக்கோல் டேவிட்.

இரண்டாம் இடைத்தை வென்ற அயர்லாந்து வீரர் ஜேம்ஸ் கெஹோ 113,120 வாக்குகள் பெற்றார்.

2019ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட இதே போட்டியில் இந்திய நாட்டைச் சேர்ந்த ஹாக்கி விளையாட்டு வீராங்கனை ரித்து பானி முதல் நிலையை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக விளையாட்டுகள்  தொடங்கி சுமார் 40 ஆண்டுகள் நிறைவு கொள்ளும் நிலையில் தங்கள் விளஐயாட்டுத் துறையில் சாதனைப் படைத்தவர்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.