வரப்போறேன் வரப்போறேன்னு சொல்லிட்டு இருக்கிறவங்க வருவாங்களா மாட்டாங்களானு எனக்குத் தெரியலை. ஒரு விஷயம் மட்டும் உறுதியா சொல்றேன். எதிர்காலத்தில் ஒட்டுமொத்த அரசியல்வாதிகள் மேலேயே மக்களுக்கு வெறுப்பு வரும்.

ஆமாம் இப்போ அரசியல்வாதிகள் அவங்க தலையில மண்ணை அள்ளிப் போட்டுக்கிட்டு இருக்காங்க. இனி 500 ரூபாய், டி.வி, மிக்ஸி, கிரைண்டர் பருப்பு வேகாது. இப்போ என் விஷயத்துக்கு வர்றேன். நேர்மையா சொல்லணும்னா, எனக்கு நல்ல படங்கள் இப்போ வந்துட்டு இருக்கு. அதன்மூலமா நல்ல வருமானம் வரும்.

செய்யணும்னு ஆசைப்படுற சமூக வேலைகள் நிறைய இருக்கு. செய்வேன். மாற்றம் ஏற்பட வேண்டும்னு சூழ்நிலை வரும்போது அந்த மாற்றத்தை ஏற்படுத்த அணிலாகவோ, பாலமாகவோ கண்டிப்பா இருப்பேன். பவருக்கு வந்தாதான், அதிகமா மக்களுக்கு நல்லது பண்ண முடியும்னு சூழ்நிலை இருந்தா, அதுதான் அரசியல்னா நானும் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்.’’ ‘‘உங்களுக்கு அரசியல் ஆர்வம் உண்டா?’’ என்ற கேள்விக்குதான் இப்படி பளிச் பதில் சொல்கிறார் விஷால்.

(நன்றி, ஆனந்த விகடன்)