கோலாலம்பூர் | பிப்பரவரி 27:-

மனித வாழ்வின் சமூகவியல் பண்பாட்டுத்தளத்தில் நிகழும் நிகழ்வுகளில் பெருநாள்கள், சடங்குகள் என்பன முக்கியம் பெறுகின்றன. இவை காலம், இடம், சூழல், தேவை, நோக்கம் என்பவற்றினால் வேறுபாட்டைகின்றது. மனிதவாழ்வு பண்பாட்டுக்குரியது என்பதால் உயிரியல் நிலையில் நிகழ்வுகள் பண்பாட்டு வயப்படுகின்றன. அந்தவகையில் தமிழர் திருநாளான தைத்திங்களில் கொண்டாடப்படும் பொங்கலும் தமிழர் மரபு சார்ந்த ஒன்றாகும். இதனை எந்த ஒரு சமய அடிப்பாட்டிலும் முடக்கிவிட முடியாது. பொங்கல் தமிழர் பண்பாட்டிலும் வாழ்க்கை முறையிலும் இரண்டாக ஒன்றினைந்து கொண்டாடப்படும் ஒரு மாபெரும் விழா என்று மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை தேசியத் தலைவர் மணித்தமிழன் கோபி குமரன் கூறினார்.

           மேலும் அவர் கூறுகையில் தமிழர் திருநாள் என தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்களால் இம்மண்ணில் தொடங்கப்பட்ட அந்த வரலாற்று திருநாளினைச் சிலர் பொங்கல் தமிழர் திருநாள் அல்ல என்று கூறுவது மிகவும் எதிர்க்கதக்க ஒன்றாக இருக்கிறது. கரணியம் பொங்கல் திருநாள் சமயத்தைக் கடந்து மொழி, பண்பாடு சார்ந்து இயங்கும் ஒருவிழா. தொல்காப்பியம் தொட்டே சங்க கால இலக்கியங்களில் அனைத்திலும் பொங்கல் தமிழருடைய புத்தாண்டு தான் எனபதற்கு வரலாற்று சான்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்று பிழை என்று சொன்னாலும் கூட அறிவியல் சார்ந்த உண்மைகளும் இருக்கிறது என்பதனை யாரும் மறுக்கவியலா ஒன்று. இந்த ஒரு  அடிப்படை தெளிவு இல்லாமல் இருக்கிறார்கள் சிலர் என்று தன் ஆதங்கத்தைத் தெரிவித்தார் தேசியத் தலைவர்.

           தமிழர்கள் தாங்கள் விரும்பும் சமய மரபுபடி இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றி கூறிப் பொங்கலைக் கொண்டாடுவது வழக்கம். அதாவது பொங்கல் பானையில் பொங்கல் வைத்து, கரும்பைக்  கட்டி , உழவனது உழைப்பை நினைக்கூறி, புத்தாடை அணிந்து, சைவமிருந்து, நாங்கள் தமிழர்கள், இது எங்களின் பண்பாட்டு அடையாளம் என்பதை உலகுக்குக் காட்டும் ஒரு பெருநாளாக கொண்டாடுகின்றனர்.

           அடிப்படை தெளிவுக்கூட இல்லாத சிலர் சித்திரை தான்  தமிழர் புத்தாண்டு என கூறுவது பயனற்ற ஒன்றாகவும் காழ்ப்புணர்ச்சி எண்ணத்தைத் தான் குறிக்கிறது. திராவிடம் என்பது  சமயம் கடந்து பகுத்தறிந்து மொழியை முன்னிருத்தும் சித்தார்ந்தமாகும். தமிழ்மொழிக்கும் இனத்திற்கும் பண்பாட்டிக்கும் திராவிட கொள்கையாளர்கள் நிறையவே செய்துள்ளனர் என்பது வரலாறாகும். நாம் இங்கு திராவிடமா சமயமா என்பதனைப் பேசுவதை விடுத்து, நம்மின மக்கள் அங்கே பல சிக்கல்களுக்கு உள்ளாகி இருக்கின்றனர். அவர்களுக்கு நற்பணியைச் செய்வோம். தமிழ் தமிழர் வாழ வழிவகுப்போம். தமிழர்களுக்குத் தைத்திங்களின் வரும் பொங்கலே தமிழர் புத்தாண்டாகும் என்று மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் நிலையான நிலைப்பாடு என பேரவையின் தேசியத் தலைவர் கூறினார்.

நன்றி ; தமிழோடு உயர்வோம்.

திரு கோபி குமரன்

தேசியத் தலைவர்

மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை

0176262628 / manimandramhq@gmail.com