கோலாலம்பூர், மார்ச் 21-

தமிழ் நேசன் நாளிதழின் முன்னாள் பணியாளர் மணி ( வயது 54) இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாகக் காலமானார். அவர் செராஸ் மருத்துவமனையில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினார்கள்.

30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் நேசனில் அவர் பணியாற்றி வந்தார். முதலில் அச்சு கோர்க்கும் பிரிவில் பணிபுரிந்தவர் பின்னாளில் அச்சிடும் பகுதியில் பணியாற்றினார். அனைவரிடமும் அன்புடன் மரியாதையுடனும் பழக்கக்கூடிய அவரின் இழப்பு குடும்ப உறுப்பினர்கள் மட்டுமின்றி தமிழ் நேசனின் முன்னாள் பணியாளர்களையும் வெகுவாகப் பாதித்துள்ளது.

இந்நிலையில் No 5 Jalan 25 taman cheras Awana எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் திங்கள்கிழமை அன்னாரின் இறுதிச் சடங்கு நடக்கும். பின்னர் அதன் பின்னர் அன்னாரின் உடல் செராஸ் Jalan kuari மின் சுடலைக்குக் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

அன்னாரின் இழப்பின் காரணமாகச் சோகத்தில் ஆழ்ந்துள்ள அவர்தம் குடும்பத்தாருக்கும் அநேகனின் ஆழ்ந்த இரங்கல்