செந்துல் | மார்ச் 23:-
டேவான் பகாசா டான் புஸ்தாக்காவின் அகராதியில் பல்வேறு இடங்களீல் கெலிங் என்ற சொல் இந்தியர்களைக் குறிக்கும் வரையில் சித்தரித்துப் பொருளுரை வழங்கப்பட்டுள்ளது.
அத்தனை இடங்களில் இருந்தும் அச்சொல் நீக்கப்பட வேண்டும். அதன் தொடர்பில் டிபிபிக்கு வழக்கறிஞர் நிறுவனம் வழி கடிதம் ஒன்றை அனுப்ப இருப்பதாக புரட்சி அமைப்பைச் சேர்ந்த உமாகாந்தன் இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

டேவான் பகாசா டான் புஸ்தாக்காவில் தம்பி எனும் தமிழ்ச்சொல்லுக்குப் பொருளுரை வழங்கும் போது மட்டும் இல்லாமல் இன்னும் பல இடங்களில் , ஏறத்தாழ 15 இடங்களுக்கும் மேலாக கெலிங் என்ற சொல் இந்தியர்களைக் குறிப்பிடும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அஃது இந்தியர்களை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதால், அத்தனைச் சொற்களையும் டிபிபி மீட்டுக்கொள்ள வேண்டும்.
இந்தியர்களைக் குறிக்கும் சொல்லாக கெலிங் என்ற சொல்லை எந்த அடிப்படையில் டிபிபி பயன்படுத்துகிறது ?
அதற்கு யார் அதிகாரம் கொடுத்தது ?
இந்தியர்களைக் குறிக்க அது சரியானச் சொல் என எந்த தமிழ் / தமிழர் சார்ந்த அமைப்பிடமோ, பல்கலைக்கழகத்திடமோ, தமிழ் நாளேட்டிலிருந்தோ, மூத்த எழுத்தாளர் அலது இலக்கியவாதிகளிடமோ டிபிபி ஆலோசனை / கலந்தாய்வு செய்தது ?
எதை டிபிபி மேற்கோளாகப் பயன்படுத்துகிறது ?
என்ற பல்வேறான கேள்விகளைக் கொண்ட கோரிக்கைக் கடிதத்தை நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (26-3-2021) வழங்க இருப்பதாக வழக்கறிஞர் தினேஷ் முத்தள் தெரிவித்தார்.
ஒரு மாத கால அவகாசத்திற்குப் பிறகும் எந்த பதிலும் டிபிபி கொடுக்க வில்லை என்றால் அதன் மீது வழக்குத் தொடுக்கப்படும் எனவும் உமாகாந்தன் சொன்னார்.
இச்சொல் சர்ச்சையானது எனத் தெரிந்தும் பொதுப் புழக்கத்தில் இருக்கும் அகராதியில் இன்னும் என் நீக்கப்படாமல் உள்ளது ?
இச்சொல் மட்டும் இல்லாம்மல் எந்தச் சமூகத்தையும் இழிவு படுத்தும் எந்தச் சொல்லும் இவ்வாறு பொதுப் புழக்கத்தில் இருக்கக் கூடாது என தினேஷ் குறிப்பிட்டார்.

