சென்னை | மார்ச் 25:-

சட்டமன்றத் தேர்தலில் பரப்புரை மேற்கொள்வதற்காக வரும் 27ம் தேதி பிரியங்கா காந்தி தமிழகம் வருகிறார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் சார்பிலும் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அதிமுக கூட்டணியில் பாஜக உள்ள நிலையில், ஏப்ரல் 2ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி, அதிமுக – பாஜக கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார்.

அதேபோல காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி 4ஆம் கட்டமாக சேலத்தில் வரும் 28 ஆம் தேதி கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளார். இந்நிலையில், பிரியங்கா காந்தி தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்காக வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அசாம் மாநிலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரியங்கா காந்தி, வரும் 27 ஆம் தேதி தமிழகத்திற்கு வரவுள்ளார். அவர் கன்னியாகுமரியில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது வருகை காங்கிரஸ் தொண்டர்களிடையே உற்காசத்தை ஏற்படுத்தி உள்ளது.

– நன்றி : நியூஸ் 18 தமிழ்