சென்னை | மார்ச் 26:-

கொம்பன் படத்தின் இரண்டாம் பாகத்தில் சூர்யாவும் அவரது தம்பி கார்த்தியும் ஒன்றிணைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று வெளியான கார்த்தியின் ‘சுல்தான்’ படத்தின் ட்ரெய்லர் நிறைய கமர்ஷியல் கூறுகளுடன் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இதில் கார்த்திக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தன்னா நடித்துள்ளார். காமெடி கதாப்பாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார். சுல்தான் படம் ஏப்ரல் 2-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வரும் கார்த்தி, அடுத்ததாக ‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’ ஆகியப் படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரனின் படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது. இந்நிலையில் மீண்டும் இயக்குநர் முத்தையாவின் அடுத்தப் படத்திலும் கார்த்தி நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொம்பன் படத்தின் இரண்டாம் பாகமான இதனை நடிகர் சூர்யா தயாரிக்கிறாராம்.

2015-ஆம் ஆண்டில் வெளியாகிய கொம்பன், கிராமத்து மாமன் – மருமகனின் உறவை மையமாக வைத்து இயக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதன் இரண்டாம் பாகத்தில், ராஜ் கிரண், லட்சுமி மேனன் மற்றும் சூரி அதே கதாப்பாத்திரங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பு கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தை, சூர்யா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

– நன்றி : நியூஸ் 18 தமிழ்