கோலாலம்பூர் | ஏப்ரல் 4:-
நாம் தமிழர் கட்சியின் முழு அதிகாரம் பெற்ற மலேசிய பிரிவான செந்தமிழர் பேரவை மலேசியா (SEPAM) உலக தமிழர் சார்பில் நாம் தமிழர் கட்சி புரட்சி வாழ்ததுகளை தெரிவித்துக்கொள்கிறது.
உலகிலேயே ஆண் வேட்பாளர்களுக்கு சரி நிகர் பெண் வேட்பாளரை நிற்க வைத்து, மண் , மொழி மற்றும் இயற்கை பற்றியான புரிதல்களை இளையோரிடையே பரப்பி பெரும் மாற்றத்தை விதைக்கின்றது. உலக முழுக்க உள்ள தமிழர்கள் மத்தியில் இது பெரும் பேச்சுப்பொருளாக மாறி அவர்களின் ஆதரவையும் பெற்று வருகிறது.
நாம் தமிழர் கட்சியின் தற்சார்ப்பு பொருளாதார கொள்கைகள் மலேசியாவிலும் பின்பற்ற படுமேயானால் பலருக்கு வேலை வாயப்பும், வணிகமும் பெருகும் என்பதுமட்டுமல்லாமல், அவர்களின் பெண்ணுரிமை கோட்பாடுகளும் தமிழ் இளைஞர்களால் பின்பற்ற பட வேண்டும்.
நாம் தமிழர் என உலகில் எங்கு ஒரு குரல் ஒலித்தாலும் அதற்கு தமிழுணர்வு கொண்ட மலேசிய தமிழ் இளைஞர்கள் இணைந்து கை கோர்ப்போம். இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலையாக தமிழ் இளைஞரகள் கருத வேண்டும் என மலேசியச் செந்தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் தியாகு லோகநாதன் அவர்கள் கூறியுள்ளார்.


