சென்னை | ஏப்ரல் 5:-

உலக தமிழினம் பாதுகாப்பாக இருக்க, தமிழக மக்கள் துயரின்றி வளமாக வாழ, தமிழருக்கென்று தனித்த அரசியல் அதிகாரம் நிறுவ, தமிழர் தாயக மண்ணான தமிழக மண்ணில் தமிழர் ஆட்சி மலர, தமிழகத் தமிழர்கள் தமிழர் தேசியம் வழிநின்று வாக்களிக்க வேண்டும் என உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு பாலமுருகன் வீராசாமி வேண்டுகோள் விடுத்தார்

அதற்கு அடித்தளம் அமைத்து, அனைத்து உயிருக்குமான அரசியலை முன்னெடுக்கும் தமிழக நாம் தமிழர் கட்சி சமரசமின்றி தனித்து நிற்கையில், வருகிற ஏப்ரல் 6-ஆம் திகதி நடைபெறவுள்ள 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தலில் அவர்களது “விவசாயி” சின்னத்தில் மாபெரும் வெற்றியை பெற வேண்டும் என்பதே உலக தமிழர்களின் வேட்கை, விருப்பம் என தெரிவித்தார்.

சுமார் அரை நூற்றாண்டு காலமாக தமிழர் மண்ணை ஆரிய திராவிட நயவஞ்சக பேர்வழிகள் ஆள விட்டதால், தமிழர் தாயகத்தின் இயற்கை வளங்கள் எல்லாம் சூறையாடப்பட்டு, தமிழர்கள் உரிமை உடமைகளை இழந்து சாதிக்கும் மதத்திற்கும் மதுவிற்கும் இலவசத்திற்கும் அடிமையானதுதான் மிச்சம்.

உலகிற்கே அன்னமிட்ட தமிழர் தாய் நிலத்தை அழிக்க மீத்தேன், நியூட்ரோ, செதெர்லைட், கெயில் எரிவாயு, அய்ட்ரோ கார்பன், பெட்ரோ கெமிக்கல், கூடங்குளம் அணுவுலை போன்ற இம்மண்ணை மடலாக்கும் எண்ணற்ற தீய அபாயகர திட்டங்களை கையெழுத்திட்டு வரவேற்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம், முல்லைப் பெரியாறு, பாலாறு, பவானி ஆற்று நீர் உரிமை, நீட் தேர்வு, விவசாயி கடன், மீனவர் பாதிப்பு போன்ற எண்ணிலடங்கா வாழ்வுரிமை போராட்டங்களுக்காக தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சிக்கப்பட வைத்தனர்.

இந்தி திணிப்பு, விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை, காவல்துறை அடக்குமுறைகள், புதிய மீன்பிடி கொள்கை, குடியுரிமை சட்ட மசோதா, பணமதிப்பிழப்பு, GST வரி மற்றும் வரி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, கேசு சிலிண்டர் விலை உயர்வு, 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, எட்டுவழிச்சாலை, வேளாண் மசோதா, தமிழக பணியில் வட இந்தியர் நியமனம், குலக்கல்வி என புதிய கல்வி கொள்கை, டெல்டா பகுதிகள் கார்ப்ரேட்டுகளுக்கு தானம், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயம் போன்ற கணக்கிட முடியாத நாசகார செயல்களை கடந்து விட முடியாது

இவை அனைத்தையும் விட தமிழர் இரண்டாவது தாயக மண்ணான தமிழ் ஈழத்தின் தொப்புள் கொடி உறவுகளை சிங்கள இனவெறிக்கு காவ கொடுத்து அமைதி காத்தது, ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொன்றதற்கு கேள்வி எழுப்பாதது, சிங்கள கடற்படையினரால் 850 மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு நீதியை கேட்காது, சல்லிக்கட்டு போராட்டத்தில் தானே கலவரம் தூண்டி மாணவர்களை அடித்தது, தமிழக கூலி தொழிலாளியை நிர்வாணமாக்கி கன்னட வனத்துறை அதிகாரிகள் அடித்தது, காவிரி சிக்கலில் தமிழக கனரக ஓட்டுனர்கள் மற்றும் அங்கு வசிக்கும் தமிழர்களை அடித்தது, தமிழக பெண்ணை கேரளா இளைஞர்கள் கலங்கப்படுத்தியது, தூத்துக்குடி துப்பாக்கிச் சுட்டுக் படுகொலை, ஆளும்கட்சி அதிகாரத்தில் பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம் போன்ற இன்னும் எத்தனையோ கொடுமைகளை உலக தமிழர்கள் மறந்து விட மாட்டார்கள் என்றார் திரு பாலமுருகன்.

ஆகவே, தமிழக தமிழர்களுக்கு ஒரே கடைசி வாய்பாக ஓட்டுரிமை வழி நமது இனம், மொழி, சமயம் பண்பாடு, உரிமை, உடமை, பாதுகாப்பு, வாழ்வாதாரம் போன்றவற்றில் மீட்சி பெற தமிழாய்ந்த தமிழர்கள் தான் தமிழர் மண்ணை ஆள வேண்டும்.

உலகையே ஆண்ட பரம்பரையை கொண்ட தமிழர்கள் தற்போது தமிழர் மாநில மண்ணையாவது ஆள தமிழக மக்கள் “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும், நம்மிலிருந்து வந்த எளிய பிள்ளைகளான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்து நாளைய தலைமுறை பிள்ளைகள் நல்வாழ்வுக்காக விருப்பு வெறுப்பின்றி தமிழர் தேசிய இன மகனாய் உழைக்க வேண்டும். அதற்கு உலக தமிழர்கள் அனைத்து வகையிலும் துணை நிற்க வேண்டும். அவ்வரிசையில் மலேசிய தமிழர்கள் சார்பில் சில விழிப்புணர்வு முன்னெடுப்புகளை செய்து வருவதையும் உலக தமிழர் பாதுகாப்பு செயலகம் ஒருங்கிணைப்பாளர் திரு பாலமுருகன் வீராசாமி கூறினார்.